நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா

சென்னை,

மாநகராட்சியின் மேயராக இருக்கும் 4 பேர் தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அதன்படி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும், ஓசூர் மாநகராட்சி மேயராக இருக்கும் சத்யா, ஓசூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். திருப்பூர் மேயராக இருக்கும் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக களம் இறங்குகிறார்.தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன், தஞ்சை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆணையர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் வழங்கினார்.

Source link