எழும்பூரில் இருந்து ஏப்ரல் 3 முதல் மீண்டும் ரயில் சேவை… புறநகர் ரயில் பயணிகள் நிம்மதி! – chennai suburban train 44 services resume from apr 3 after egmore station works

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த பணிகள் காரணமாக, கடந்த ஒன்றரை மாதங்களாக புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டு நாட்கள் முன்கூட்டியே ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்புவது கவனிக்கத்தக்கது.

Chennai Suburban Train Services Resume April 3(புகைப்படங்கள்Samayam Tamil)
எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள 10, 11 ஆகிய நடைமேடைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. 44 ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன. எஞ்சியுள்ள ரயில்களை Short சர்வீஸ் முறையில் சென்னை கடற்கரை – பரங்கிமலை, பரங்கிமலை – தாம்பரம் என இயக்கப்பட்டன. இதனால் தினசரி வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ரயில்களுக்கான காத்திருப்பு நேரம் 8 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் வரை அதிகரித்தது.

வேளச்சேரி பறக்கும் ரயில் இணைப்பு சேவை

இதன் காரணமாக ரயில் நிலையங்களில் அதிகப்படியான கூட்டம் நிரம்பத் தொடங்கியது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசலில் மிகவும் சிரமப்பட்டு பயணிக்க வேண்டி வந்தது. இதற்கிடையில் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் இணைப்பு சேவை நீண்ட காத்திருப்பிற்கு பின்னர் பயன்பாட்டிற்கு வந்தது. இது ஓரளவு ஆறுதலை தந்தது. அதேசமயம் ஆதம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வராதது சர்ச்சையானது.

காரைக்குடி – திருச்சி ரயில் பாதையில் மின்சார ரயில்!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

இந்நிலையில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட புறநகர் ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பணிகள் முன்கூட்டியே முடிவுக்கு வந்துள்ளன. இதையடுத்து நாளை முதல் எழும்பூரில் புறநகர் ரயில் சேவை தொடங்கும். நிறுத்தப்பட்ட 44 புறநகர் ரயில்களும் மீண்டும் பயன்பாட்டிற்கு வருகின்றன. இதன்மூலம் எழும்பூரில் 10, 11வது பிளாட்பார்ம்களில் வழக்கமான நேரங்களில் ரயில்கள் இயக்கப்படும்.

ரயில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் பணிகள்

இது பயணிகளுக்கு பெரிதும் மகிழ்ச்சியூட்டும் தகவலாக அமைந்திருக்கிறது. அடுத்த முறை மாற்று ஏற்பாடுகள் மூலம் பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ரயில் சேவை பெரிய அளவில் நிறுத்துவது சிரமத்தில் ஆழ்த்தும். சென்னை மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்துகளாலும் சமாளிக்க முடியாது நிலை வரும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.