அடிச்சு சொல்றேன்.. பிரதமர் மோடி வந்தால் உறுதியாகிடும்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி – cm mk stalin criticized bjp government and pm modi at covai campaign

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்புமனுத் தாக்கல் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பரப்புரையில் தீவிரம் காட்டி கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று காலை ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர், தற்போது கோவையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அரசியல் தலைவர்களின் தீவிர பிரச்சாரம்
ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் இருந்து தனது பரபரப்புரையை துவங்கினார். இந்நிலையில் கோவையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்து வரும் முதல்வர், 2021ல் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கோவை தான் நான் அதிகம் முறை வந்த மாவட்டம்.

கோவையில் முதல்வர் பரப்புரை
திமுக கூட்டணிக்கு கடந்த நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்து இருக்கிறீர்கள். இதே போன்ற ஒரு வெற்றியை 2026 தேர்தலிலும் தர வேண்டும். கலவரம் செய்தால் வெற்றியை பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் செயல்படும் கட்சிக்கு மக்கள் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும். கோவை, மதுரையில் போதிய மக்கள் தொகை இல்லையென மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்தனர். ஆனால் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவதை போன்று, ஆக்ராவில் ஆளே இல்லாமல் மெட்ரோவை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை மறந்துவிடும் பாஜக
தமிழ்நாட்டை, தமிழை, தமிழரை தொடர்ந்து வஞ்சிக்கிறது பாஜக. ஒன்றிய பட்ஜெட் தயார் செய்யும்போது பாஜகவை மொத்தமாக மறந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டை மொத்தமாக பழிவாங்கும் காரணத்தால், வாக்குசாவடிக்கு செல்லும் மக்கள் பாஜகவை மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு ஞாபகம் வருவதில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக அங்கே பரப்புரையில் பேசினார். ஒன்றிய கல்வி அமைச்சர் தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசினார்.
தமிழர்களை திருடர்களாக சித்தரித்தனர்
நாம் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மன்னிப்பு கேட்டார். தமிழர்களை ஒடிசாவில் பாஜக எப்படியெல்லாம் விளம்பரங்கள் மூலமாக இழிவு செய்தது என்பதை எல்லாரும் அறிவார்கள். தமிழ்நாட்டுக்கு ஜெகநாதர் கோயில் கருவூல சாவி போய்விட்டதாக பேசி, தமிழர்களை திருடர்களாக சித்தரித்தார்கள். ஒன்றிய அமைச்சர் சோபா தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் குண்டு வைப்பதாக பேசினார். பின்னர் பிரச்சனையாகவும் மன்னிப்பு கேட்டார்.

பிரதமர் வருகையால் திமுக இலக்கு உறுதி
தமிழ்நாட்டில் பீகாரில் பேசிய வார்த்தையை, தைரியம் இருந்தால் பேசுவீர்களா? என பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர். மேலும் அவர் பேசுகையில், 2024 தேர்தலில் சென்னையில் ரோடு ஷோ நடத்தினார் மோடி. அப்போது நாம் 40க்கு 40 வென்றோம். இப்பவும் அடிச்சு சொல்றேன். அவர் வந்தால் நமது 200 தொகுதி என்ற இலக்கு உறுதியாகி விடும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

செந்தில் பாலாஜி
இதனிடையில் கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி, இந்த முறை கோவையில் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அங்கு கடந்த முறை 10 தொகுதிகள் திமுக வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட நிலையில், கோவையில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக செந்தில் பாலாஜி அங்கு போட்டியிடவுள்ளார். இதனையடுத்து வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.
செயல் வீரர்
இந்நிலையில் இன்று கோவை பரப்புரையில் செந்தில் பாலாஜி குறித்து பேசிய முதல்வர், “செந்தில் பாலாஜி என்றால் செயல் வீரர் என்று அர்த்தம். நினைத்ததை சாதித்து காட்டுபவர். அதனால் தான் அவர் தற்போது கோவையில் நிற்கிறார். எந்த வேலை கொடுத்தாலும் எதிர்பார்ப்புக்கு மேல் செய்வார் என செந்தில் பாலாஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Source link