சென்னை,
23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ஜூன் 11-ந் தேதி முதல் ஜூலை 19- ந் தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடு களில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் 42 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 6 அணிகளை தேர்வு செய்வதற்கான கடைசி கட்ட தகுதி சுற்று ஐரோப்பிய கண்டம் மற் றும் கண்டங்களுக்கு இடையிலான ‘பிளே-ஆப்’ சுற்று என இரு பிரிவாக அரங்கேறியது.
ஐரோப்பிய கண்டத்துக்கான ‘பிளே-ஆப்’ சுற்று இறுதி ஆட்டங்கள் போஸ்னியாவில் உள்ள செனிகா நக ரில் நடந்த இறுதி ஆட்டம் இத்தாலி அணி, போஸ்னியாவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கூடுதல் நேரம் முடிவிலும் இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபி டிக்கப்பட்டது. இதில் போஸ்னியா அணி 4-1 என்ற கோல் கணக்கில் இத் தாலியை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
