தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு – கட்டுப்பாடு விதித்த தேர்தல் ஆணையம்

புதுடெல்லி,

கேரளா (140 தொகுதிகள்) மற்றும் அசாம் (126 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் (30 தொகுதிகள்) ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந்தேதியும், மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23-ந்தேதி மற்றும் 29-ந்தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாகவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நடத்தவோ, வெளியிடவோ தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், ஏப்ரல் 23-ந்தேதி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், 21-ந்தேதி மாலை 6 மணி வரை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை வெளியிட தடை இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் 2 வருடம் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link