புதுச்சேரில் வரும் 4 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்க்கொள்ள உள்ள நிலையில் காவல்துறையினர் 11 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்
இந்த நிலையில்,புதுச்சேரில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் தவெக தனித்து களமிறங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டு இருந்தார்.அதன்படி ஏப்ரல் 5ஆம் தேதி 23 இடங்களில் பிரச்சாரம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தார்.இது தொடர்பாக புதுச்சேரி காவல்துறையினர் தீவிர ஆலோசனை மேற்க்கொண்டனர்.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
விஜய் பிரச்சாரம்
ஆனால்,ஏப்ரல் 5 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏப்ரல் 6-ம் தேதி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் அடுத்தடுத்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.இதன் காரணமாக ஏப்ரல் 4 ஆம் தேதி பிரச்சாரத்தை விஜய் நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியது.முதலில் விஜய் பிரசாரத்திற்கு புதுச்சேரி காவல்துறை நேரக்கட்டுப்பாடு விதித்தது. அதன்பின் நீக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விஜய் அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல விஜய் செல்லும் நான்கு பகுதிகளில் தலா 1 மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
விஜய் மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு 11 நிபந்தனை:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக தேசிய தலைவர் நிதின் நாபின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் 5ம் தேதி புதுச்சேரிக்கு வர உள்ளதால் அந்த நாளில் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்குவது பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என காவல்துறையின தெரிவித்தனர்.
- 4ம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. 23 இடங்களில் பிரச்சாரம் நடத்த அனுமதி கேட்டு இருந்த நிலையில் நான்கு இடங்களுக்கு மட்டும் காவல்துறையினர் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கியுள்ளனர்.
- குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு வரும் விஜய் கொக்கு பார்க் வெங்கடசுப்பா ரெட்டி சிலை சதுரங்கம் தவளக்குப்பம் சந்திப்பு மற்றும் வில்லியனூர் கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய இடங்களில் மட்டுமே வேனில் நின்று பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பிரச்சாரம் காலை 9 மணியிலிருந்து பகல் 1.30 மணி வரை மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் ஒவ்வொரு இடத்திலும் அதிகபட்சமாக 2000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- குறிப்பாக தமிழகத்தில் இருந்து வரும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இது பங்கேற்க கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் புதுச்சேரி உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இதனைத் தொடர்ந்து பிரச்சாரம் நடைபெறும் இடங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் வரக்கூடாது வாட்டர் பாட்டில் பிஸ்கட் ஆம்புலன்ஸ் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் வேன் மேலே நின்று பேசுவது அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பிரச்சார வேலை பின்தொடர கூடாது அனைவரும் ஒழுங்காக அமைதி காத்து நேரத்துக்கு உட்பட்டு பிரச்சாரத்தை முடித்து சென்னை திரும்ப வேண்டும். இதுவே புதுவை காவல்துறை விதித்த 11 நிபதனைகளின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
