பதும் தானி,
12-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே ஆதிக் கம் செலுத்திய ஜப்பான் அணி 6-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை துவம்சம் செய்தது. இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சீனதைபேவை பந்தாடியது. இந்திய அணி அடுத்த ஆட் டத்தில் வருகிற 5-ந் தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
