எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் வழக்கம் போல ரெயில்கள் இயக்கம்

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10 மற்றும் 11 வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில் நிலை யத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்ததால், நடைமேடை 10, 11 வழியாக இயக்கப்பட்ட மின்சார ரெயில் சேவை, 5, 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டன.

இதுதவிர ரெயில் சேவையும் கணிசமாக குறைக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். மேலும் மறுசீரமைப்பு முடிந்ததும் வழக்கமான ரெயில் சேவை ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கும் என்று தென்னக ரெயில் அறிவித்து இருந்தது. இந்தநிலையில், பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமேடை 10,11 வழியாக மின்சார ரெயில் இயக்கப்படும் எனவும் ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனைத்து பணிகளும் திட்டமிட்ட தேதிக்கு முன்பே முடிக்கப்பட்டதால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 10 மற்றும் 11-வது நடைமேடை வழி யாக மீண்டும் வழக்கம்போல ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

இதனால் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் அமலில் இருந்த தற்காலிக மின்சார ரெயில் கால அட்டவணை ரத்து செய்யப்படுகிறது. கடந்த பிப்ர வரி 20-ந்தேதிக்கு முன்பு நடைமுறையில் இருந்து வழக்கமான வார நாட் கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை மீண்டும் அமலுக்கு வருகிறது.

அதன்படி, வார நாட்களில் சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு இடையே 106 ரெயில் சேவைகளும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டு தாம்பரம் – கடற்கரை இடையே 106 ரெயில் சேவைகளும் என இரு மார்க்கமாகவும் மொத்தம் 212 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி சென்னை கடற்கரை-தாம் பரம்-செங்கல்பட்டு இடையே 93 சேவைகளும், மறுமார்க்கமாக, செங்கல் பட்டு-தாம்பரம்-கடற்கரை இடையே 97 சேவைகளும் என மொத்தம் 190 ரெயில் சேவைகள் இயக்கப்படும்.

Source link