தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சார அட்டவனை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக சார்ப்பில் போட்டியிடும் தொகுதி மற்றும் வேட்பாளர்களை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,டிடிவி தினகரனின் அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,சைதாப்பேட்டை,திருப்பத்தூர்,பூந்தமல்லி,காரைக்குடி,பெரியகுளம்,திருச்சிராப்பள்ளி,மன்னார்குடி,திருவையாறு,ஓட்டப்பிடாரம் ,நாங்குநேரி,மடத்துக்குளம் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்,ஏப்ரல் 6 முதல் அமமுக பொதுச்செயலாளர்டிடிவி தினகரன் பிரசாரம் மேற்க்கொள்ள உள்ளார்.அமமுக தலைமைக் கழகம்வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்வருகின்ற 23.04.2026 வியாழக்கிழமையன்று
நடைபெறுவதை முன்னிட்டு, அம்மாமக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்டிடிவி தினகரன் 06.04.2026 முதல் 18.04.2026 வரை,கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு,தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நாள் – சட்டமன்றத் தொகுதி
- 06.04.2026 திங்கட்கிழமை – சைதாப்பேட்டைசட்டமன்றத் தொகுதி
- 07.04.2026 செவ்வாய்க்கிழமை – பூந்தமல்லிசட்டமன்றத் தொகுதி
- 08.04.2026 புதன்கிழமை – திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி
- 09.04.2026 வியாழக்கிழமை – பெரியகுளம்சட்டமன்றத் தொகுதி
- 10.04.2026 வெள்ளிக்கிழமை – காரைக்குடிசட்டமன்றத் தொகுதி
- 11.04.2026 சனிக்கிழமை – திருச்சிராப்பள்ளிமேற்கு சட்டமன்றத் தொகுதி
- 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை – மன்னார்குடிசட்டமன்றத் தொகுதி
- 13.04.2026 திங்கட்கிழமை – திருவையாறுசட்டமன்றத் தொகுதி
- 15.04.2026 புதன்கிழமை – ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதி
- 17.04.2026 வெள்ளிக்கிழமை – நாங்குநேரிசட்டமன்றத் தொகுதி
- 18.04.2026 சனிக்கிழமை – மடத்துக்குளம்சட்டமன்றத் தொகுதி
- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
