சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தாக்கத்தை ஏற்படுத்தாது: சபரீசன் பேட்டி

சென்னை,

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் மோகன் இந்த தொகுதிக்குட்பட்ட நல் வாழ்வு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, அவரது கணவர் சபரீசனும் கலந்துகொண்டனர்.கூட்டம் முடிந்தவுடன் சபரீசனிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர்.அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தல் களத்தை சந்திக்கி றோம். தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆத ரவு சிறப்பாக இருக்கிறது. மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும். 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இந்த தேர்தலில் த.வெ.க. எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத் தாது. 2 தொகுதிகளில் போட்டியிடுவது என்பது அந்த தலைவரின் தன்னம்பிக்கையின்மையை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த தேர்தலில் சபரீசன் நேரடி அரசியல் களத்தில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link