புதுவையில் இன்று மாலை பிரதமர் மோடி ரோடு ஷோ

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) புதுவையில் ‘ரோடு ஷோ’ நடத்துகிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்துக்கு மாலை 4.15 மணிக்கு வருகிறார். அங்கு அவருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

பின்னர் கார் மூலம் அஜந்தா சந்திப்புக்கு வருகிறார்.பாதுகாப்பு ஏற்பாடுகள்அங்கிருந்து திறந்த வாகனத்தில் ஏறி ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அஜந்தா சிக்னல் சந்திப்பில் தொடங்கும் இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெற உள்ளது. ரோடுஷோவை முடித்து விட்டு மீண்டும் புதுச்சேரி விமான நிலையத்திற்கு திரும்பும் அவர் மாலை 5.50 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை செல்கிறார்.பிரதமரின் வருகையை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், சிறப்பு பாதுகாப்பு குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர். விமான நிலையம் முதல் ரோடுஷோ நடைபெறும் இடம் வரை சிறப்பு பாதுகாப்பு குழுவினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது.மது விற்பனை செய்ய தடைஇந்த பகுதியில் துணை ராணுவ படையினர், போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இன்று புதுவையில் 2 ஆயிரம் துணை ராணுவ படையினர், 1,000 போலீசார் என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு புதுச்சேரியில் 8 பகுதிகளில் இன்று காலை முதல் இரவு 8 மணி வரை மதுபான, சாராயக்கடைகள், ஓட்டல்களில் உள்ள மதுபான விற்பனை பிரிவு ஆகியவற்றில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை சாலைஏர்போர்ட் சாலையில் தொடங்கி லதா ஸ்டீல், கிழக்கு கடற்கரை சாலை, சிவாஜி சிலை சந்திப்பு, கருவடிக்குப்பம், ஏழை மாரியம்மன் கோவில், அஜந்தா சந்திப்பு வரையும், எஸ்.வி. படேல் சாலையில் கவர்னர் இல்லம் முதல் ஆனந்தா இன் ஓட்டல், அண்ணாசாலை, ஒதியஞ்சாலை சந்திப்பு, புஸ்சி வீதி, பழைய கோர்ட்டு, கடற்கரை சாலை, கவர்னர் மாளிகை வரை மதுக்கடைகளை மூட வேண்டும். இதனை மீறி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source link