கோவை வடக்கு டிமாண்ட்…அண்ணாமலை பிடிவாதம் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் சிக்கல்! – tamilnadu bjp candidates due to demand from annamalai

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் காலம் கூட இல்லாத சூழலில் அரசியல் களம் சூடுபிடித்து விட்டது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளது.

அதன்படி, இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாஜக, பாமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் இதில் சிறிய கட்சிகளும் இணைந்து உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்காக ஒரு ஆண்டுக்கு முன்பு கூட்டணி அமைத்து அதிமுக பாஜக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக தலைமையில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு இந்த முறை 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக தரப்பில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக, பாமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி அறிவித்து வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாஜகவில் தொகுதிகளில் வேட்பாளர்களை உறுதி செய்வது சிக்கல் நீடித்து வருகிறது. இதற்குக் காரணம் ஒரே தொகுதியில் பல முக்கிய புள்ளிகள் போட்டியிட விரும்புவதாக தெரிவித்தது தான்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

மேலும் பாஜகவில் வேட்பாளர் தெருவில் இழுபறி நீடித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தொடர்ந்து சமூக ரீதியான வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது குறிப்பாக தென் தமிழகம் மற்றும் மேற்கு மண்டலங்களில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியானது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தேர்தல் பரப்புரையில் இருந்த அண்ணாமலைக்கு அவசர அவசரமாக அனுப்பி விடுக்கப்பட்டது. பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரடியாக அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சியை சீட்டு வழங்கினாலும் அவர் போட்டியிட மாட்டார் என்ற தகவலும் மறுபுறம் வெளியானது. அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த தொகுதியில் வானதி சீனிவாசனை நிறுத்த பாஜக தலைமை முடிவு செய்துள்ளது இதனால் மாற்று தொகுதியாக மொடக்குறிச்சிகள் போட்டியிட கட்சி மேலிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. எனினும் கோவை வடக்கு தொகுதி வழங்கப்படாவிட்டால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வார காலமாகவே வேட்பாளர் தேர்வு குறித்து மாநில தலைவர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனால் எந்த ஒரு தீபம் எட்டப்படாமல் இடுவரின் எடுத்து வருகிறது. இதனால் பிரதமர் மோடி அதிருப்தியில் இருப்பதாகவும் நாளை நடைபெறவிருந்த ஆலோசனை மற்றும் பிரச்சார கூட்டங்களையும் ரத்து செய்ததாகவும் தகவல் வெளியாக்கிய உள்ளது.

மேலும் கோவை வடக்கு தவிர வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் என்றும் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலையின் டிமாண்ட் காரணமாக பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

Source link