கொல்கத்தா,
கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு தனது பேட்டிங்கை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
போட்டிக்கு பின் அவர் பேசுகையில், “2023 முதல் என் ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாகவே உள்ளது. என்னை விமர்சிப்பவர்கள் என் விளையாட்டை சரியாகப் பார்க்காதவர்களாக இருப்பார்கள் அல்லது விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்கள். என் வெற்றியை பார்த்து அவர்கள் பொறாமைப்படுகிறார்கள். இப்போட்டியில் என் நோக்கம் சரியாக இருந்தது. சில சமயங்களில் ரிதம் கிடைக்காது” என்றார்.
ஐதராபாத்துக்கு எதிரான இப்போட்டியில் தனது 200வது ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய ரஹானே, 10 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 226/8 ரன்கள் எடுத்தது. பின்னர் 227 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் கொல்கத்தா அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்ததாக அவர்கள் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளை எதிர்கொள்ள உள்ளனர்.
