மேற்கு வங்க நிலக்கரி ஊழல்: ஐ-பேக் நிறுவன அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

மேற்கு வங்க நிலக்கரி சுரங்க ஊழல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, பிரபல அரசியல் வியூக நிறுவன மான ஐ-பேக் உயர் அதிகாரி மற்றும் ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகி விஜய் நாயர் ஆகியோரது இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி திருடப் பட்டதாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊழல் பணத்தில் சுமார் 20 கோடி ரூபாய் ‘ஹவாலா’ முறையில் ஐ-பேக் நிறுவனத்திற்கு கைமாறியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஐ-பேக் இணை நிறுவனர் ரிஷி ராஜ் சிங் வீடு, மும்பையில் உள்ள விஜய் நாயர் வீடு என டெல்லி, ஐதராபாத் உள்பட பல நகரங்களில் இந்த சோதனைகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

ஏற்கனவே ஜனவரி மாதம் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, தேர்தல் பணிகளை மேற்கோள் காட்டி தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ஐ-பேக் நிர்வாகிகள் கோர்ட்டை நாடியுள்ளனர்.

Source link