பா. ரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை , பா. ரஞ்சித்தின் துணை இயக்குநர் இயக்க உள்ளதாகவும் படத்திற்கு, ‘வேட்கை’ எனப் பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக, நீலம் தயாரிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் சமூக கருத்துக்களைப் பேசுவதாகவும், பொது வெளியில் விவாதங்களை உருவாக்குவதாகவும் இருக்கும். இதனிடையே, ஜி.வி பிரகாஷ் இந்த கூட்டணியில் இணைய இருப்பதால், படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Source link