நீண்ட இழுபறிக்கு பிறகு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டியிருக்கிறது. ஆனால் அந்த பட்டியலில் அண்ணாமலை இடம் பெறவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய பாஜகவிற்கு அதிமுக 27 தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நியமிப்பதில் இழுபறி நீடித்து வந்த சூழலில் தற்போது பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
பாஜக வேட்பாளர் பட்டியல்
1. ஆவடி – ராஜ சிம்மா மஹிந்திரா
2. மயிலாப்பூர்- தமிழிசை சௌந்தர்ராஜன்
3. தளி – நாகேஷ் குமார்
4. திருவண்ணாமலை- ஏழுமலை
5. ராசிபுரம்- பிரேம்குமார்
6. மொடக்குறிச்சி- கிருத்திகா சிவகுமார்
7. உதகமண்டலம்- போஜராஜன்
8. அவிநாசி- எல்.முருகன்
9. திருப்பூர்- தங்கராஜ்
10. கோவை வடக்கு- வானதி சீனிவாசன்
11. தஞ்சாவூர்-முருகானந்தம்
12. திருவாரூர்- கோவி சந்துரு
13. கந்தர்வகோட்டை (தனி) – உதயகுமார்
14. புதுக்கோட்டை- ராமச்சந்திரன்
15. அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த்
16. மானாமதுரை (தனி) – பாலகணபதி
17. திருப்பத்தூர்- திருமாறன்
18. மதுரை தெற்கு- ராம சீனிவாசன்
19. சாத்தூர்- நயினார் நாகேந்திரன்
20. ராமநாதபுரம்- கே. நாகேந்திரன்
21. திருச்செந்தூர்- ராதாகிருஷ்ணன்
22. வாசுதேவநல்லூர்- ஆனந்தன் அய்யாசாமி
23. ராதாபுரம்- பாலகிருஷ்ணன்
24. நாகர்கோயில்- காந்தி
25. குளச்சல்- சிவக்குமார்
26. பத்மநாபபுரம்- ரமேஷ்
27. விளவங்கோடு – விஜய தாரணி
அண்ணாமலை பெயர் இடம் பெறவில்லை
இந்த வேட்பாளர் பட்டியலில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை பெயர் இடம் பெறவில்லை. மேலும் நாளைய பிரதமர் கூட்டத்திற்கு பின்பு வெளியாகும் என வேட்பாளர் பட்டியல் முன்னதாகவே வெளிவந்திருக்கிறது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் நிச்சயம் அதிருப்தி அடைவார்கள் என சொல்லப்படுகிறது. மேலும் இது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குஷ்பூ,அண்ணாமலை உள்ளிட்ட சில நிர்வாகிகள் சமீப காலமாக கேரளா தேர்தலில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்ணாமலை கேட்ட சிங்காநல்லூர் கவுண்டம் பாளையம் ஆகிய இரண்டு தொகுதிகளும் தனக்கு கிடைக்கட்டவிட்டால், தான் போட்டியிட போவதில்லை என அண்ணாமலை ஏற்கனவே சொல்லியிருந்த சூழலில் இந்த வேட்பளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஏன் இந்த இரண்டு தொகுதிகளை மட்டும் அண்ணாமலை விரும்புகிறார் என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கிடையில் பலவீனமான தொகுதிகளை பாஜகவிற்கு அதிமுக வழங்கி என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது.
