திநகர் தொகுதியில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் போட்டியிடுகின்றார். இந்த தொகுதியில் மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்பது குறித்து தவெக ஆனந்த் பேசியுள்ளார். வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்
முக்கிய அம்சங்கள்:
திநகர் தொகுதி மக்கள் வரவேற்பு
நம்பிக்கையில் என்.ஆனந்த்
இதற்கிடையில் இன்று தியாகராயர் நகர் தொகுதியில் வாக்கு சேகரித்து வரும் என்.ஆனந்த் அங்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கின்றது என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியது, தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பினை தலைவர் விஜய்எனக்கு கொடுத்துள்ளார். அவரின் உத்தரவின்படி நான் இங்கு போட்டியிடுகின்றேன். தற்போது இந்த தொகுதியில் வாக்கு சேகரிக்கும் மக்களின் முகத்தை பார்த்தேன்.
அவர்கள் சந்தோஷமாக எங்களை வரவேற்றார்கள். தளபதிக்காக கண்டிப்பாக நாங்கள் உங்களுக்கு வாக்களிப்போம் என சொன்னார்கள். விசில் சின்னத்தில் தான் நாங்கள் வாக்களிப்பது என்றே முடிவை எடுத்துவிட்டோம் என மக்கள் கூறினார்கள். இதன் மூலம் மக்கள் தவெக கட்சியின் மீதும் தலைவர் விஜய் மீதும் எந்தளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்பதை பார்க்க முடிகின்றது.
மேலும் தியாகராயர் பகுதி மக்களின் கோரிக்கையை கேட்டு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இருக்கின்றோம். இந்த தொகுதியில் மாமூல் வாங்கப்படுவதாக கேள்விப்பட்டு இருக்கின்றோம். முதலில் அதனை ஒழிக்க வேண்டும். இதைப்போல அவர்களின் தேவை அறிந்து அனைத்து விஷயங்களை செய்து தர இருக்கின்றோம் என்றார் ஆனந்த். மேலும் தவெக தலைவர் விஜய் தியாகராயர் தொகுதியில் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வார்.
எப்போது பிரச்சாரம் மேற்கொள்வார் என்பதை அவரே முடிவு செய்து அறிவிப்பார். ஆனால் கண்டிப்பாக இந்த தொகுதியில் தலைவர் பிரச்சாரம் மேற்கொள்வார் என்றார் ஆனந்த். இந்நிலையில் தியாகராயர் நகர் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக களத்தில் இறங்குகின்றனர். தங்களின் கூட்டணி கட்சிகள் இல்லாமல் நேரடியாகவே திமுக மற்றும் அதிமுக தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிடுவதால் கண்டிப்பாக இம்முறை கடுமையான போட்டி நிலவும் என தெரிகின்றது.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்தும் நம்பிக்கையாக இருப்பதால் கண்டிப்பாக இம்முறை மும்முனை போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. வழக்கமாக தியாகராயர் நகர் தொகுதி என்றாலே திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும். கடந்த முறை திமுகவை சேர்ந்த கருணாநிதி இந்த தொகுதியில் வெற்றிபெற்றார். அவருக்கும் அதிமுகவை சேர்ந்த சத்யராணாயணன் என்பவருக்கும் பலத்த போட்டி நிலவியது.
இவர்கள் இருவருக்கும் இடையே மிகவும் குறைவான வாக்குகளே வித்யாசமாக இருந்தது. கிட்டத்தட்ட 500 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கருணாநிதி தியாகராயர் தொகுதியில் வெற்றிபெற்றார். இவ்வாறு திமுக மற்றும் அதிமுக இடையே இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் தற்போது மும்முனை போட்டியாக தவெகவும் களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விஜய் கட்சியில் செங்கோட்டையன்! அதிமுக வாக்குகள் எப்படி பாதிக்கும்- மக்கள் கருத்து இதுதான்
இம்முறை தி.நகர் தொகுதியில் ராஜா அன்பழகன் திமுக சார்பாக போட்டியிடுகின்றார். கடந்தமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெ.கருணாநிதிக்கு இம்முறை இந்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
