Annamalai About Bjp Candidates,பாஜகவின் வெற்றிக்காக துணை நிற்பேன்..பரப்புரை செய்வேன்: அண்ணாமலை உறுதி – k.annamalai tweet about bjp candidate list for 2026 elections

பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கனவே அவர் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. தற்போது அவரின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லாததும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்ணாமலை ட்விட்டரில் பதிவு போட்டுள்ளார். பாஜகவின் வேட்பாளர்களுக்கு தனது வாழ்த்தினை கூறி பதிவிட்ட அண்ணாமலை கண்டிப்பாக அவர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன். மேலும் பாஜகவின் வேட்பாளர்களின் வெறிக்காக பரப்புரை செய்து துணை நிற்பேன் என பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. இதனால் அவருக்கு சீட் வழங்கவில்லை. அதன் காரணமாக அதிருப்தியில் இருக்கின்றார் என்ற பேச்சுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார் அண்ணாமலை.
அண்ணாமலைக்கு பாஜகவில் சீட் வழங்கப்படுமா ? அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது. கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலைக்கும் பாஜகவிற்கும் சில கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அவர் கேட்கும் தொகுதியை பாஜக ஒதுக்க முன்வரவில்லை என்றும் தகவல்கள் வந்தன.

இதனால் அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாக செய்திகள் வந்தன. சமீபத்தில் கோவைக்கு பிரதமர் மோடி வந்தபோது கூட அதே ஊரில் இருந்துகொண்டு அண்ணாமலை பிரதமரை வரவேற்க வரவில்லை. இதனால் மேலும் சர்ச்சைகள் அதிகரித்தது. வரவேற்பாளர் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இருந்தும் அவரை வரவில்லை என கட்சியை சேர்ந்தவர்கள் கூறினார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் அண்ணாமலையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டதாக தெரிகின்றது. இருப்பினும் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு சுமுகமான முடிவும் எட்டப்படவில்லையாம். கடந்த முறை அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இம்முறை அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக சொல்லப்பட்டது.

ஆனால் அதே தொகுதியில் தான்வானதி சீனிவாசன் கடந்தமுறை போட்டியிட்டு வெற்றிபெற்றார். எனவே அந்த தொகுதி மீண்டும் வானதி சீனிவாசனுக்கு தான் ஒதுக்கப்படும் என உறுதியானது. இதனைத்தொடர்ந்து அண்ணாமலை கேட்கும் தொகுதி கிடைக்காததால் மாற்று தொகுதியில் அவர் போட்டியிட மாட்டேன் என தெரிவித்ததாகவும் தகவல்கள் உலா வந்தன. இருப்பினும் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறும் என்ற நம்பிக்கை அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலருக்கு இருந்தது.

இந்நிலையில் இன்று வெளியான வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். ஆனாலும் அண்ணாமலை வரும் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக போராடுவேன், பாஜகவின் வெற்றி வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்வேன் என பதிவு போட்டார்.

இதன் மூலம் அண்ணாமலை அதிருப்தியில் இல்லை என தெரிகின்றது. அப்படியே அதிருப்தியில் இருந்தாலும் அவரிடம் கட்சியின் தலைமை பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமான முடிவை எடுத்திருப்பார்கள் என்றே தெரிகின்றது. இந்நிலையில் அண்ணாமலைக்கு பாஜக வேட்பாளர் பட்டியலில் இடமில்லை. ஆனாலும் அண்ணாமலை பாஜக வேட்பாளருக்காக பரப்புரை செய்வேன் என உறுதியளித்திருக்கின்றார்.

இதன் மூலம் பாஜக சீட் வழங்காததால் அண்ணாமலை அதிருப்தியில் இல்லையா ? அவர் அதிருப்தி அடையாமல் இருப்பதற்கு என்ன காரணம் ? ஒருவேளை எதிர்காலத்தில் தேசிய அளவில் அண்ணாமலைக்கு ஏதேனும் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதா ? என்பது போன்ற பல கேள்விகள் உலா வந்துகொண்டு இருக்கின்றன. இதற்கெல்லாம் இந்த தேர்தல் முடிந்த பிறகு விடை தெரியும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது

விஜய் கட்சிக்கும் பாஜகவுக்கும் செட் ஆகாது – அண்ணாமலை…!

https://x.com/annamalai_k/status/2039986920143622405

Source link