சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தமிழக உயர் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,332 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் ஆண்கள் 1,025, பெண்கள் 306, மூன்றாம் பாலினத்தவர் 1 (வில்லிவாக்கம் தொகுதி) ஆகும்.

இனி 4 மற்றும் 6-ந்தேதியன்று மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். 7-ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 9-ந்தேதி வேட்புமனுவை திரும்பப் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு, வேட்பாளரின் இறுதி பெயர் பட்டியல் தயார் செய்யப்படும்.

இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தலைமைச்செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், புதிய டிஜிபி சந்தீப் ராய் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

பிரதமர் வருகை, அரசியல் கட்சி தலைவர்களின் பரப்புரைக்கான பாதுகாப்பு குறித்தும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 6,13-ல் தேர்தல் பாதுகாப்புக்காக 250 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் வர உள்ளனர்.

Source link