அண்ணாமலையின் பெயர் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அது ஏன் என்பது குறித்து பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் விளக்கம் கொடுத்துள்ளார்
முக்கிய அம்சங்கள்:
அண்ணாமலைக்கு ஏன் சீட் இல்லை ?
பியூஷ் கோயல் விளக்கம்
பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு பேசிய பியூஸ் கோயல், பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் தீவிர ஆலோசனைக்கு பிறகே உருவாக்கப்பட்டது. மாநில அளவிலான கருத்துக்களையும் வேட்பாளர்களின் விருப்பங்களையும் கேட்டு தான் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வேட்பாளர்களையும் ஆலோசித்து அவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகின்றனர், எந்த வகையில் செயலாற்ற விரும்புகின்றனர் என்ற அனைத்தையும் கருத்தில் கொண்டே பாஜகவின் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அண்ணாமலை கட்சிக்காக கடுமையாக பாடுபடும் வீரர், அவர் தமிழகம் முழுவதும் வேலை செய்ய விரும்புகின்றார். ஒரு தனிப்பட்ட தொகுதிகளில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக அளவில் செயலாற்ற அண்ணாமலை விரும்பினார். அதன் காரணமாக தான் வேட்பாளர் பட்டியல் பெயரில் அவர் இடம்பெறவில்லை என்றார் பியூஷ் கோயல்.
இந்நிலையில் அண்ணாமலைகுறித்து கட்சியை சேர்ந்தவர்கள் பேசுவதை பார்த்தால் கட்சிக்கும் அண்ணாமலைக்கும் இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டு இருப்பதாகவே தெரிகின்றது. என்னதான் அண்ணாமலைக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக சொன்னாலும் கடைசியில் கட்சிப்பணியில் ஈடுபட அண்ணாமலை முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகின்றது.
அவரே பாஜகவின் வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே ஒருவேளை அண்ணாமலைக்கு கட்சியில் ஏதேனும் உயரிய பொறுப்பு கொடுக்கப்படுமா ? தேசிய அளவில் அண்ணாமலை செல்ல இருக்கின்றாரோ ? என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வருகின்றது. தேசிய அளவில் அண்ணாமலைக்கு பொறுப்பு ஏதேனும் கொடுக்கப்படுமா ? என்பது தான் தற்போது கேள்வியாக உள்ளது.
பியூஷ் கோயல் கூட, ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் அண்ணாமலை செயலாற்ற விரும்புகின்றார் என கூறியுள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கையில் அவருக்கு கட்சியில் கண்டிப்பாக பொறுப்பு ஏதேனும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் அண்ணாமலை கோவை வடக்கில் போட்டியிட இருந்தார் என்றும், அந்த தொகுத்திருக்கு கிடைக்காததால் தான் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்றும் பேச்சுக்கள் போய்க்கொண்டு இருந்தன.
வானதி ஸ்ரீநிவாசன் தான் கோவை வடக்கில் கடந்த போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதைப்போல இம்முறையும் கோவை வடக்கில் வானதி ஸ்ரீனிவாசன் தான் போட்டியிடுகின்றார். அந்த தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விரும்பியதாகவும், அவர் கேட்கும் தொகுதி கிடைக்காததால் வேறெந்த தொகுதியிலும் அண்ணாமலை போட்டியிட விரும்பவில்லை என்றும் செய்திகள் வந்தன.
பாஜகவின் ஆட்ட நாயகன் அண்ணாமலை…டெல்லி போடும் மெகா பிளான்..!
ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என்பதும் தெரியவில்லை. கடைசியில் இந்த தேர்தலில் போட்டியிடாமல் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்வதென்றே முடிவை எடுத்துள்ளார் அண்ணாமலை. தேர்தலுக்கு பிறகு தான் அண்ணாமலையின் அடுத்தகட்ட முடிவுகள் என்னென்ன என்பது தெரிய வரும்
