Aadhav Arjuna About Sabareesan,அவர் யாரென்றே மக்களுக்கு தெரியாது..முதல்வரின் குடும்பமே வந்தாலும் எங்களுக்கு தான் வெற்றி..சபரீசன் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா – tvk aadhav arjuna reply to dmk sabareesan criticisms

முதலமைச்சர் முக ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தவெக குறித்து பேசியிருந்தார். அவரின் பேச்சிற்கு தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்து வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்தில் பேசியிருந்தார்

முக்கிய அம்சங்கள்:

சபரீசன் பேச்சு

ஆதவ் அர்ஜுனா பதிலடி

aadhav arjuna about sabareesan
தவெக சார்பாக வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகின்றார். அங்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் ஆதவ் அர்ஜுனா. இதனைத்தொடர்ந்து திமுகவின் சபரீசன் பேச்சிற்கு ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்திருக்கின்றார். முதலமைச்சர் முக ஸ்டாலினின் மருமகனான சபரீசன் நேற்று தவெக குறித்து பேசினார். தவெக கட்சியால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது அவரின் தன்னம்பிக்கையை குறிப்பதாக உள்ளது என்றார் சபரீசன்.இதனைத்தொடர்ந்து இவரின் இந்த பேச்சிற்கு ஆதவ் அர்ஜுனா தற்போது பதிலளித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா பேசுகையில், அவர் யாரென்றே மக்களுக்கு தெரியாது. அவர் சொல்வதை மக்கள் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கூட இங்கு வரட்டும், இல்லை அவருடைய ஒட்டுமொத்த குடும்பமே வரட்டும், யார் வந்தாலும் தவெகவிற்கு தான் வெற்றி. இந்த தொகுதியை திமுக கண்டுகொள்ளவில்லை.
கடந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் இந்த தொகுதியை கண்டுகொள்ளவில்லை. எனவே மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த தொகுதியில் ஒரு எம்எல்ஏ அலுவலகம் கூட இல்லை. இந்த தொகுதியில் மட்டுமல்ல 234 தொகுதியிலும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். திருச்சியில் தலைவர் விஜய்யின் பரப்புரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
எனவே எங்களுக்கு தான் வெற்றி என கூறி சபரீசன் பேச்சிற்கு பதிலளித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. மேலும் தவெக வேட்பாளர்களுக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. கண்டிப்பாக தவெக மிகப்பெரிய வெற்றியை பெரும் என நம்பிக்கையாக பேசியுள்ளார் ஆதவ் அர்ஜுனா. இதைப்போல தவெக வேட்பாளர்கள் அனைவரும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வேட்பாளர்கள் வெற்றி குறித்து நம்பிக்கையாக பேசி வருகின்றனர். இதற்கிடையில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா பேசுவது பெரும்பாலும் சர்ச்சையாக உருவெடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது சபரீசனை ஆதவ் அர்ஜுனா பினாமி என குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
பினாமியின் பெயரெல்லாம் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள் என ஆதவ் அர்ஜுனா பேசியதும் சர்ச்சையாகுமா ? என்பது தெரியவில்லை. இதற்கு திமுக தரப்பினர் கண்டிப்பாக பதிலடி கொடுப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதைப்போல பணம் கொடுத்தால் மக்கள் வாக்கு போட்டுவிடுவார்கள் என்றும் நினைக்கின்றனர். அதெல்லாம் இனி நடக்கவே நடக்காது என்றும் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். ஆதவ் அர்ஜுனா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தவெகவினரும் திமுகவை தான் விமர்சித்து பேசி வருகின்றனர். அரசியலில் ஒரே எதிரி திமுக தான் என்ற அவர்களின் குறிக்கோளில் தவெகவினர் நிலையாக இருந்து பேசிக்கொண்டு வருகின்றனர்.

பாஜக கூட்டணிக்கு வரும் விஜய்?- நயினார் நாகேந்திரன் பேட்டி..!

பதிலுக்கு திமுக தரப்பும் தவெகவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் முக ஸ்டாலின் அல்லது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தவெகவை அந்தளவிற்கு விமர்சனம் செய்வதில்லை. அவர்கள் குறிப்பாக அதிமுகவை தான் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கையில் இந்த தேர்தலில் திமுக -அதிமுக -தவெக என மும்முனை போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.பலரும் மும்முனை போட்டி தான் நிலவும் எனவும் கணித்து வருவது குறிப்பிடத்தக்கது