அர்ஜுன் தாஸின் “ஒன்ஸ் மோர்” படத்தின் “இந்திரா” பாடல் வெளியானது

சென்னை,

தமிழில் ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். அதனை தொடர்ந்து ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘போர்’ போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் உடன் இணைந்து ‘ஒன்ஸ் மோர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். நவீன கால இளைஞர் ஒருவரின் காதலைப் பேசும் கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.

‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். மலையாள திரையுலகில் வெளியான ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

‘ஒன்ஸ் மோர்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்தபடத்தில் நடிகை சோனா ஓலிக்கல் ‘இந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் வெயில் (2022), கடகன் (2024) மற்றும் ஓ மேரி லைலா (2022) போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ‘ஒன்ஸ் மோர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இந்திரா’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Source link