முன்னாள் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபால் அதிமுக மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றார். மேலும் தன் மகன் தவெகவில் இணைந்தாலும் தனக்கு எப்போதும் அதிமுக தான் என பேசியுள்ளார் தனபால்
முக்கிய அம்சங்கள்:
ஆதியும் அந்தமும் அதிமுக தான்
தனபால் உருக்கம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நன்மதிப்பை பெற்ற தனபாலுக்கு அதிமுகவில் இம்முறை சீட் வழங்கவில்லை. அவிநாசி தொகுதியின் எம்.எல்.ஏ தான் தனபால். ஆனால் அவருக்கு தற்போது சீட் வழங்கவில்லை. பாஜகவிற்கு அவிநாசி தொகுதியை அதிமுக ஒதுக்கியிருக்கின்றனர். இதனால் தனபால் மேலும் அதிருப்தியில் இருக்கின்றார்.
பலமுறை அதிமுக கட்சியை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றி இருக்கின்றேன். ஆனால் எனக்கு தற்போது கட்சியில் எந்த மரியாதையும் இல்லை என கூறியிருக்கின்றார் தனபால். மேலும் அவர் பேசுகையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் எனக்கு சீட் கிடைக்கவிலை. ஆனால் அதில் எனக்கு பெரிதாக வருத்தமில்லை. கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த என்னை அதிமுகவை சேர்ந்தவர்கள் யாருமே வந்து பார்க்கவில்லை. அதுதான் எனக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கின்றது.
தன் தந்தையை கட்சியை சேர்ந்த யாருமே கண்டுகொள்ளவில்லையே என்ற விரக்தியில் தான் என் மகன் தவெகவில் இணைந்துள்ளார். என்னதான் என் மகன் தவெகவில் இணைந்தாலும் என் ஆதியும் அந்தமும் அதிமுக தான் என உருக்கமாக பேசினார் தனபால். இந்நிலையில் ஜெயலலிதா அவர்களின் மதிப்பை பெற்ற தனபாலுக்கு தற்போது சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவரை அதிமுகவினர் கைவிட்டுவிட்டனர்.
இதுவே ஜெயலலிதா அவர்கள் தற்போது உயிரோடு இருந்திருந்தால் தனபாலை கைவிட்டு இருப்பாரா ? கண்டிப்பாக அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்திருப்பார். அவருக்கு மீண்டும் அவிநாசி தொகுதியில் சீட் வழங்கப்பட்டு அவர் வெற்றியும் அடைந்திருப்பார் என்பதே ஜெயலலிதா விசுவாசிகளின் கருத்தாக இருக்கின்றது.
அப்படி இருக்கையில் தனபாலுக்கு சீட் கொடுக்காதது அதிமுகவிற்கு தான் பின்னடைவாக அமையும் என பலர் கருதுகின்றனர். அம்மாவின் ஆட்சியை தொடருவோம் என அதிமுகவினர் சொல்லிக்கொண்டு இருக்கும் நிலையில் அவரால் பதவி கொடுக்கப்பட்ட தனபாலை அக்கட்சியினர் கைவிட்டது அவர்களுக்கு பின்னடைவாக அமையும் என்றே பலர் சொல்கின்றனர்.
எனவே இதனால் அவிநாசி தொகுதியில் ஏதேனும் தாக்கம் ஏற்படுமா ? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதைப்போல அவிநாசி தொகுதியில் மட்டுமல்லாமல் ராசிபுரம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கின்றார் தனபால். தற்போது அதே தொகுதியில் தான் அவரின் மகன் லோகேஷ் தவெக சார்பாக போட்டியிடுகின்றார்.
தனபால் தனக்கு சீட் கேட்டும் கொடுக்கவில்லை, கட்சியில் மதிப்பில்லை என ஆதங்கமாக பேசியுள்ளார். இவரின் இந்த ஆதங்கம் அவரது ஆதரவாளர்களை வருத்தமடைய செய்துள்ளது. எனவே இதெல்லாம் ராசிபுரம் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிடும் லோகேஷிற்கு வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்…யார் இந்த தனபால்?
ஆனால் இதுபோன்ற வாய்ப்புகளை அதிமுக தான் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் மட்டும் தனபாலுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுத்து சீட் வழங்கியிருந்தால் அவிநாசி அல்லது ராசிபுரம் என இரண்டு தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு அதிமுகவிற்கு பிரகாசமாக இருந்திருக்கும் என்பது பொதுவான மக்கள் பலரின் கருத்தாக உள்ளது.
