பெஜியா,
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 8 வீரர், வீராங்கனை கள் பங்கேற்றுள்ளனர். 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 5-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, ரஷியாவின் ஆந்த்ரே இசிபென் கோவை எதிர்த்து ஆடினார். இந்த ஆட்டம் 31-வது நகர்த்தலில் டிரா ஆனது.
அதாவது ஒரே மாதிரியான நிலை அடுத்தடுத்து 3 முறை வந்ததால் டிராவில் முடிக்க வேண்டியதாகி விட்டது. மற்றொரு ஆட்டத்தில் ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) 41-வது நகர்த்தலில் அமெரிக்காவின் ஹிகரு நகமுராவை தோற்கடித்தார். 5-வது சுற்று முடிவில் சிந்தாரோவ் 4% புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். பிரக்ஞானந்தா 2½ புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார். இன்று 6-வது சுற்று நடக்கிறது.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், சீனாவின் டான் ஜோங்யியுடனான ஆட்டம் 45-வது நகர்த்தலில் ‘டிரா’வில் முடிந்தது.
