கொலை வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகசாமி(எ) ஆனந்த்(எ) ஆனந்தகுமார் (வயது 37) என்பவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளின்பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் உத்தரவின்பேரில் மேற்சொன்ன நபரை நேற்று சிப்காட் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Source link