திருமணத்திற்கு தயாரான விஜய் – த்ரிஷா.. இதோ, அந்த நேரம் வந்துவிட்டது..! ஹிண்ட் கொடுத்த த்ரிஷாவின் அம்மா..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷாலா இடையேயான உறவு குறித்து கோலிவுட்டில் பெரும் விவாதம் நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.. அவரின் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க உள்ளது..

இந்நிலையில், தமிழகத் தேர்தலுக்குச் சற்று முன்பு விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவாகரத்து மனுவில், விஜய் மற்றொரு நடிகையுடன் நெருக்கமாகப் பழகுவதால் அவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்றும் தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் புதிய மனு ஒன்றையும் சங்கீதா தாக்கல் செய்திருந்தார்..

விஜய்யும் த்ரிஷாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக அரசல் புரசலாக தகவல் வந்த வண்ணம் இருந்தது.. இந்த சூழலில் சங்கீதாவின் இந்த குற்றச்சாட்டு மூலம் அந்த நடிகை த்ரிஷா என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது..

இந்த பரபரப்பு அடங்குவதற்குள். விஜய்யும், த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் ஒன்றாக, கல்பாத்தி அகோரம் மகன் திருமணத்திற்கு நேற்று முன் தினம் வந்தார்.. மேடைக்கு ஒன்றாக சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒன்றாகவே புறப்பட்டனர்.. இந்த சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறி உள்ளது.

விஜய் என்ன செய்தாலும், அவருக்கு சப்போர்ட் செய்து வந்த விஜய்யின் ரசிகர்கள் இந்த விஷயத்தில் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.. விஜய்யின் கட்சி தொண்டர்களோ, கட்சியை விட்டு விலகுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்..

இந்த சூழலில் விஜய் மற்றும் த்ரிஷாலாவின் காதல் மற்றும் திருமணம் குறித்த யூகங்களால் இணையமும் சமூக ஊடகங்களும் பரபரப்பாக உள்ளன. இதற்கு த்ரிஷாவின் தாயார் அளித்த பதில் இந்த யூகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

விஜய் மற்றும் த்ரிஷா கடைசியாக ‘லியோ’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப் படத்திற்குப் பிறகு அவர்களின் நெருக்கம் இன்னும் அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்..

விஜய் மற்றும் த்ரிஷாவின் திருமணம் தொடர்பான எதிர்பாராத வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. ஒரு ரசிகர், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று அறிவித்து ஒரு ரீலை உருவாக்கியுள்ளார். அதில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்த ஜோடி தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், இந்த ரீலுக்கு த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் லைக் செய்திருப்பது அங்கு ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த ஒரு எதிர்வினையின் மூலம், அவர்களின் திருமணத்திற்கு மறைமுகமாக பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் வைரலாகி வருகின்றன.

விவாகரத்து சர்ச்சை குறித்து விஜய் என்ன கூறுகிறார்?

விஜய் மனைவியின் விவாகரத்து மனு, தமிழ் அரசியலில் ஒரு சூடான விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், விஜய் சமீபத்தில் நடந்த தவெக நிகழ்ச்சியில் இதுகுறித்து முதன்முறையாக பேசினார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், தனது விவாகரத்து குறித்தும் பேசினார்.. அப்போது “ சமீபத்தில் சில பிரச்சனைகளில், நீங்கள் போராடி Hurt ஆவதை நான் பார்க்கிறேன்.. அதை பார்த்து எனக்கு Hurt ஆகுது.. அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.. நானும் நீங்களும் சேர்ந்து மக்கள் பிரச்சனைகளை மட்டும் பார்போம்.. அவ்வளவு எல்லாம் Hurt ஆகாதீங்க.. அதெல்லாம் Worth இல்ல. நம்பிக்கையோடு இருங்க.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்.

Read More : நீங்கள் தர்பூசணி சாப்பிட்டால் உங்கள் இதயத்திற்கு என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சியூட்டும் உண்மைகள் இதோ..!

Source link