விஜய் கார் மீது ஏறி தொண்டர்கள் அட்ராசிட்டி..! புதுச்சேரி பரப்புரைக்கு சென்ற போது பெரும் பரபரப்பு..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 

இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.. அதன்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. மேலும் கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. அன்றைய தினமே பெரம்பூரில் இருந்து தனது பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்.. எனினும் அன்றைய விஜய் 4 இடங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்ட நிலையில் 2 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்தார்..

இதனிடையே புதுச்சேரியில் 23 இடங்களில் பரப்புரை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருந்தார்.. இதற்காக தவெக தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.  ஆனால் புதுச்சேரியில் விஜய் பரப்புரைக்கு 19 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. விஜய்க்கு 4 இடங்களில் மட்டுமே பரப்புரை செய்ய புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.. மேலும் 2 மணி நேரத்திற்குள்  முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது..

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக விஜய் இன்று புதுச்சேரி சென்று கொண்டிருந்தார்.. அப்போது மரக்காணம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விஜய் காரை ஒரு சில தொண்டர்கள் மறித்து பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர்.. சில தொண்டர்கள் விஜய் கார் மீது ஏறியதால் பரபரப்பு நிலவியது.. உற்சாக மிகுதியில் தவெக தொண்டர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய்யோடு வந்த பவுன்சர்கள் அவர்களை கார் மீதிருந்து கீழிறக்கி அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்..

விஜய் கட்சிக்கு பின்னால் இருக்கும் கூட்டம் கட்டுப்பாடுகள் இல்லாத கூட்டம் என்ற விமர்சனம் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நடு ரோட்டில் கார் மீது ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

Read More : Flash : ஷாக்..! தங்கம் விலை இன்றும் தடாலடி உயர்வு..! எவ்வளவு தெரியுமா..?

Source link