மகப்பேறு நிதியுதவி ரூ.25,000.. ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு.. புதுச்சேரிக்கு விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகள்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

வரும் 9-ம் தேதி புதுச்சேரியில் தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்க.. உங்கள் விஜய்க்கு ஓட்டு போடுவதாக நினைத்து ஓட்டுப் போடுங்க.. மக்களுக்கு துணை நிற்க தவெகவுக்கு ஓட்டுப் போடுங்க.. இது சாதாரண தேர்தல் இல்லை.. விசில் புரட்சி தேர்தல்.. தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் விசில் புரட்சி நடக்க வேண்டும்..

புதுச்சேரியில் தவெக ஆட்சிக்கு வந்தால், துணை நிலை ஆளுநரின் தலையீடு இல்லாமல் மாநில அந்தஸ்து வாங்கி கொடுக்க 100% முயற்சி எடுக்கப்படும்.

தவெக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

மகப்பேறு நிதியுதவியாக ரூ.25,000 வழங்கப்படும்.

அனைத்து அரசுப் பணிகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

100% பயிர் காப்பீடு வழங்கப்படும்.

மீன் பிடிக்க செல்வோருக்கு டீசல் லிட்டருக்கு ரூ.20 மானியம் வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் 25% வளர்ச்சி பணிகளுக்கு உத்தரவாதம் வழங்கப்படும்.

உங்க விஜய்க்கு, உங்கள் அண்ணனுக்கு, உங்கள் தம்பிக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.. புதுச்சேரி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.. நம்பிக்கையோடு இருங்க.. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்..

Read More : தேர்தல் என்ன பரீட்சை பேப்பரா..? மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தில் வேண்டும்.. விஜய் பரப்புரை..!

Source link