மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய வம்சாவளியினரின் கலாசார நடனம்

கோலாலம்பூர்,

பிரதமர் மோடி மலேசியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக மலேசியாவுக்கு சென்று சேர்ந்த அவரை, மலேசிய ​​பிரதமர் அன்வர் இப்ராகிம் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். இந்நிலையில், கோலாலம்பூரில் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் இந்திய வம்சாவளியினர் கலாசார நடனம் ஒன்றை ஆடினர்.

ஏறக்குறைய 800-க்கும் மேற்பட்டோர் ஒரே மேடையில், தொடர்ந்து 5 நிமிடங்கள் வரை, வெவ்வேறு வகையான இந்திய பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்களை ஆடி காட்டினர். அந்நிய மண்ணில் இந்திய பாரம்பரியத்தின் பாதுகாப்பை வெளிப்படுத்தும் நோக்கிலும் பாரம்பரிய மற்றும் நவீன வம்சாவளியினருக்கு பாலம் ஏற்படுத்தும் நோக்கிலும் அமைந்த இந்த நிகழ்வு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

Also Read
வங்காளதேசம்: சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மந்திரி திடீர் மரணம்

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய வம்சாவளியினரின் கலாசார நடனம்

இதுபற்றி மலேசிய சாதனை புத்தகத்திற்கான உயரதிகாரி கிறிஸ்டோபர் வாங் கூறும்போது, இந்திய பாரம்பரிய நடனங்களை 800 நடன கலைஞர்கள் ஆடுவது என்பது எளிய விசயம் அல்ல. நிறைய ஒருங்கிணைப்பும், குழு வேலையும் தேவைப்படும்.

இதனை ஒன்றிணைத்த இசை இயக்குநருக்கும் நன்றிகள். இந்த சாதனைக்கு சான்றளித்ததற்காக மலேசிய சாதனை புத்தகங்களுக்கான அமைப்பு பெருமிதம் கொள்கிறது என கூறினார். கலாசார நடனம் ஆடி சாதனை படைத்த இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடியும் பாராட்டினார்.

Source link