வார்த்தைகள் அளவு மீறினால்.. நாற்காலிக்கு அடியில் ஊர்ந்து.. இபிஎஸ்ஸுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த சேகர் பாபு – dmk minister sekar babu stern warning admk edappadi palaniswami

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்றும், நாளை மறுநாள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் மும்முரமாக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடவுள்ள கார்த்திக் மோகன் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அவருடன் அமைச்சர் சேகர் பாபுவும் வருகை தந்திருந்தார்.

பரப்புரையில் இபிஎஸ் பேச்சு
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் இபிஎஸ்ஸுக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்துள்ளார். அதாவது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இறுதி காலத்தில், அவரை மு.க. ஸ்டாலின் வீட்டு சிறையில் வைத்திருந்தார் என எடப்பாடி பழனிசாமி பரப்புரை ஒன்றில் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு திமுகவினர் இடையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இபிஎஸ்ஸுக்கு பதிலடி கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

சேகர் பாபு பதிலடி
அந்த வகையில் இன்று இபிஎஸ் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சேகர் பாபு, “எங்கள் மறைந்த நினைவில் வாழும் கலைஞர் அவர்களின் அந்திம காலங்களில் அவரை எப்படி மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார்கள் என்பது நாடறியும். கலைஞர் வாழும் வரை அவர் திமுகவின் தலைவராக இருந்தார். மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதல்வராக இருந்தவர். நாற்காலிக்கு அடியில் ஊர்ந்து வந்து பதவியை பெற்றவர் கிடையாது.
கடும் எச்சரிக்கை
வார்த்தைகள் அளவு மீறினால் நாங்களும் வார்த்தைகளால் அளவு மீறுவதற்கு தயாராகா இருக்கிறோம். எந்த பந்தை கொண்டு எறிகிறீர்களோ, அது மீண்டும் உங்கள் பக்கம் திரும்பும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் சேகர் பாபு. மேலும், நான் சென்னையில் சிறையில் இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பெங்களூர் சிறைக்கு மாறினேன் என்று சசிகலா பேசியதை குறிப்பிட்டு உன்னை முதல்வராக்கியவர் மூன்று மாதங்களில் மறந்தவர் நீ.
வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர்
ஆனால் எங்கள் முதல்வர், கலைஞரை தலைவராக, வழிகாட்டியாக, தந்தையாக ஏற்றுக் கொண்டவர். இன்றைக்கும் உயிருக்கு நிகராக கலைஞரை நினைப்பவர் எனவும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதனிடையில் அண்ணாநகர் எம்எல்ஏ மோகனின் மகன் கார்த்திக் வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளாராக களமிறங்கியுள்ளார். அண்ணாநகர் தொகுதியில் கார்த்திக் மோகன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா
இந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இதனால் தமிழக அரசியல் களத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக வில்லிவாக்கம் பார்க்கப்படுகிறது. இங்கு இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது. ஆதவ் அர்ஜுனா தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், கார்த்திக் மோகனும் தீவிரமான பிரச்சாரம் செய்து வருகிறார். இதனிடையில் அவருக்கு ஆதரவாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் பங்கேற்றார்.

சபரீசன் கருத்து
இது அரசியல் களத்தில் பெரிதும் கவனம் ஈர்த்தது. சபரீசன் நேரடி அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அவர் வில்லிவாக்கம் வேட்பாளர் கார்த்திக் மோகனை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டுமென திமுக நிர்வாகிகளிடம் தெரிவித்தாராம். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சபரீசன், திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்பதில் 100% நம்பிக்கை உள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link