அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஆரணியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “ கலைஞரை வீட்டு சிறையில் வைக்கப்பட்டார் என்று நான் சொல்லவில்லை.. ஆ. ராசா தான் அதை சொன்னார். ஸ்டாலின் அவர்களே என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? ஆ. ராசா பேசிய ஆடியோவில் உள்ளது தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்த உடன் விசாரணை நடத்தப்படும். அதிமுக ஆட்சி அமைந்த உடன், கலைஞரை வீட்டு சிறையில் வைத்தவர்களை கண்டறிந்து தண்டனை பெற்றுத்தரப்படும்.
கருணாநிதி இறந்த போது அவரின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் வேண்டும் என்று கேட்டார் நான் கொடுக்கவில்லை என்று ஸ்டாலின் என் மீது குற்றம்சுமத்தி உள்ளார்.. ஆனால் காமராஜர் முதலமைச்சராக இருந்து நாட்டுக்கு பல நன்மைகளை செய்தவர் ஒரு பெருந்தலைவர்.. காமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்ட போது, முதலமைச்சராக இருந்து இறந்தால் இடம் கொடுக்க முடியும் என்று கருணாநிதி சொன்னார்..? அப்படி எனில் முன்னாள் முதல்வருக்கு ஒரு நியாயம்? உங்கள் தந்தைக்கு ஒரு நியாயமா? என்று மெரினாவில் இடம் கொடுக்க முடியாது என்று சொன்னேன்.. ஸ்டாலின் அவர்களே உங்கள் அப்பா எடுத்த முடிவை தான் நான் எடுத்தேன்.. காமராஜருக்கு ஒரு நியாயம்? கருணாநிதிக்கு ஒரு நியாயமா? ஜெயலலிதா இறந்த போது என்னவெல்லாம் பேசினீர்கள்? நினைவிருக்கிறதா?
அதிமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு தமிழ்நாட்டை வளர்ச்சி அடைய செய்துள்ளதாக முதல்வர் பேசி உள்ளார். ஆனால் கொலை கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விற்பனை, கடன் வாங்குவதில் தான் திமுக அரசு சாதனை செய்துள்ளது. போதை பொருள் புழக்கத்தில் தான் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை திமுக ஏமாற்றி உள்ளது. இந்த தேர்தல் தான் திமுகவின் கடைசி தேர்தலில்.. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்..” என்று தெரிவித்தார்..
Read More : திடீர் ட்விஸ்ட்..! தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யும் திருமாவளவன்..? விரைவில் அறிவிப்பு..!
Next Post
Sat Apr 4 , 2026
நேற்று ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி படையால் (IRGC) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தைத் தொடர்ந்து காணாமல் போன அமெரிக்க விமானியைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவும் ஈரானும் காலக்கெடுவுக்குள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில், தேடுதல் பணியில் இணையுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான், வெகுமதியும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. நேற்று தாக்ககப்பட்ட இரண்டு விமானங்களில் அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) விமானமும் அடங்கும் என்றும், ஒரு படை […]

