திருச்செந்தூரில் பரபரப்பு! ஓட்டு கேட்டுச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டியடித்த மக்கள்- பின்னணி என்ன? – tiruchendur dmk candidate anitha radhakrishnan kalvilai village campaign controversy

ஓட்டு கேட்டுச் சென்ற திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை மக்கள்விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன்(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாடு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தயாராகி வருகிறது. இந்த தேர்தலில், திமுக தலைமையில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளது.திமுக பொருத்தவரை 164 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளது. கூட்டணி முழுவதும் உள்ள மொத்தம் 175 வேட்பாளர்கள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளனர்.

திமுகதேர்தல் வியூகம்

மேலும் இந்த முறை திமுக தனது 164 வேட்பாளர்களில் 60-க்கும் மேற்பட்ட புதிய, இளம் முகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்களில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர்.கன்னியாகுமரி, ராதாபுரம், பாளையங்கோட்டை, அருப்புக்கோட்டை போன்ற முக்கிய தொகுதிகளை திமுக வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் ஐந்தில் திமுக போட்டியிடவும், ஒரு தொகுதியைத் தனது கூட்டணிக் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸுக்கு (INC) ஒதுக்கவும் முடிவு செய்துள்ள திமுக, தனது தேர்தல் வியூகத்தை வலுப்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

திருச்செந்தூரில் சட்டமன்ற தொகுதி

அந் த வகையில், திருச்செந்தூரில் சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான அனிதா ராதகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதே போல் அதிமுக கூட்டணியில் இருக்க கூடிய பாஜக வசம் சென்றுள்ளது. அந்த வகையில் பாஜக சார்பில் கே.ஆர்.எம். ராதகிருஷ்ணன் , தவெக சார்ப்பில் முருகன், நாதக சார்பில் ஒபிலியா உள்ளிட்டோரும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் 88,274 வாக்குகள் 50.58% பெற்றார். 25,263 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்தார் திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை நாடார் சமூகம்,தேவேந்திர குல வேளாளர்,பரதவர் (மீனவர் சமூகம்),முஸ்லிம்கள் ,கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சமுகத்தினர் என பன்முக கொண்ட தொகுதியாக உள்ளது.மேலும் இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு

இந்த நிலையில், மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் திருச்செந்தூரில் வாக்கு சேகரிப்பிற்காக திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது ஆதரவாளர்களுடன் கிராம கிராம சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் இன்று கல்வினை பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்விளை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்படவில்லை முன்பு கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைத்தனர். இதனால் நிலைமை பதற்றமாக மாறியதாக கூறப்படுகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்ய சென்றபோது, சிலர் அவரை சுற்றி எதிர்ப்பு குரல் எழுப்பினர்.

திமுக வேட்பாளர் மீது மக்கள் அதிருப்தி

மேலும், அங்கு இருந்த திமுக சார்ந்த ஒருவரிடம் பெண்கள் நேரடியாக கேள்வி எழுப்பியதும் சூழ்நிலையை மேலும் பரபரப்பாக்கியது. சில பெண்கள் அவரது சட்டையைப் பிடித்து விளக்கம் கேட்க முயன்றதாக கூறப்படுகிறது. இந் த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந் த சம்பவத்தால் திமுக வேட்பாளர் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த தொகுதியில் மீண்டும் வெற்றியை பதிக்குமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.