விசிக தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான் சட்டப்பேரவை செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.. சட்டப்பேரவைக்கு செல்ல 25 ஆண்டுகளாக விருப்பம் கொண்டிருந்தேன்.. 2001-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றும், அந்த பதவியை ராஜினாமா செய்தேன்.. 2006 தேர்தலில் அதிமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட விரும்பினேன்.. ஆனால் கடைசி நேரத்தில் போட்டியிடுவதை தவிர்த்தேன். அன்று இது பெரியளவில் பேசப்படவில்லை.. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன், பின்னர் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்தேன்..
2006-க்கு பிறகு தனிச்சின்னத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாகி இருந்தேன்.. 2009-ல் உச்சநீதிமன்றம் வரை சென்று நட்சத்திரம் சின்னம் பெற்று, 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்..
பின்னர் 2016-ல் மக்கள் நலக் கூட்டணியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன்.. 2019-ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.. 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்ற உணர்வு இருந்தாது..
2026 சட்டப்பேரவை தேர்தல் வழக்கமான பொது தேர்தல் இல்லை.. வலதுசாரியின் கைகள் ஓங்கி வருகின்றன.. நாங்கள் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற கூட்டணியை பலவீனப்படுத்த எல்லா முயற்சிகளையும் சங் பரிவார்கள் மேற்கொண்டனர்.. என்னை கூட்டணியில் இருந்து பிரிக்க முயற்சி செய்தனர்..
இன்று திமுக தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக இருப்பதற்கு திருமாவளவன் முக்கிய காரணம் என்பதை பெருமையோடு சொல்லி கொள்கிறேன்.. எந்த ஆசை வார்த்தைகளுக்கும் இணங்காமல் திமுக கூட்டணி உடையாமல் இருக்க பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன்..
இந்த தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டேன்.. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தேன்.. இந்த முறை கூட்டணி ஆட்சி குறித்து பேசமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டோம்..
இந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறேன் என்று அறிவித்திருந்தேன்.. திருமாவளவன் துணை முதல்வராக ஆசைப்படுகிறார் என்றும், அதனால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும், தொங்கு சட்டசபை வரும் என்று திருமா நம்புவதாகவும் பல வியூகங்களை கட்டமைத்து வருகின்றனர்..
புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கத்தான் பழைய எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.. அவர்களை வெளியேற்ற எதுவும் காரணம் இல்லை.. கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால் சட்டமன்றத்திற்குள் போகாமலும் அதை செய்ய முடியும்.. எம்.பியாக இருந்து கொண்டும் அதை செய்ய முடியும்..
திருமாவளவன் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார் என்ற ரீதியாக கருத்துகள் பரப்பப்படுகிறது.. இதை நான் புறந்தள்ள முடியாது.. பின்வாங்குவதும் ஒரு ராஜ தந்திரம் தான்.. திட்டமிட்ட விசிகவுக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகளும், என் நோக்கத்தை கொச்சைப்படுத்துவது போல் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.. பதவிக்காக நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.. திருமாவளவனை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.. திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.. தொங்கு சட்டசபை வரும் என்று சந்தேகப்பட்டு நான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பது தவறான கருத்து.. எனது நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்.. நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு காட்டு மன்னார் கோயிலில் ஜோதிமணி போட்டியிடுவார்..” என்று தெரிவித்தார்..
