அதிமுக, பாஜக மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்த முயற்சித்தது.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு – aiadmk and bjp tried to stop the kalaignar urimai thogai scheme udhayanidhi stalin accusation

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டு வரும் நிலையில் மற்றொரு பக்கம் கனிமொழியும், உதயநிதி ஸ்டாலினும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய பிரச்சாரமும் அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , முதுகுளத்தூர் வேட்பாளரை ஆதரித்து செய்த பிரச்சாரத்தில் பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
கடந்த சட்டமன்ற தேர்தலிலே அனைத்து தொகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவருடைய பரப்புரை அந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய சட்டமன்ற தேர்தலிலும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும், பாஜகவையும் தொடர்ந்து விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் அவர் பேசி வருவது வைரலாகி கொண்டிருக்கின்றன.

அதிமுக, பாஜக முயற்சி
அந்த வகையில் தற்போது முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை ஆதரித்து செய்துள்ள பரப்புரையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பாஜக, அதிமுக நிறுத்த முயற்சித்தாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது தொடர்பாக அவர் பேசுகையில், தேர்தலை காரணம் காட்டி உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்தனும் சொல்லி அதிமுகவும், பாஜகவும் முயற்சி செஞ்சாங்க. நம்முடைய தலைவர் இந்த திட்டத்தை அறிந்து ஐயாயிரம் ரூபாயாக கொடுத்தார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
1 கோடியே 32 லட்சம் குடும்பங்களுக்கு நம்முடைய முதலமைச்சர் கொடுத்து இருக்காங்க. காலைல ஆறரை மணிக்கு பேங்க் அக்கவுண்ட்ல போட்டாங்க. நம்மோட மகளிர் 9 மணிக்கெல்லாம் போய் எடுத்துட்டாங்க. ஏனென்றால் அந்தளவுக்கு மோடி அரசு மேல நம்பிக்கை. எங்க பேங்க்ல இருக்க பணத்தையும் மினிமம் பேலன்ஸ் சொல்லி ஒன்றிய பாஜக அரசு பிடுங்கிடுமோ என்று பயம். இந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் மகளிர் உரிமைத்தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிச்சு இருக்கார்.

கோடைக்கால சிறப்பு நிதி
இந்த இராமநாதபுரம் திமுகவுடைய கோட்டை. ராஜகண்ணப்பனை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கனும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக மூன்று மாத மகளிர் உரிமைத்தொகையாக ரூ. 3000, கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ. 2000 என மொத்தமாக ரூ. 5000 மகளிர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முடக்குவதற்கு பாஜக அரசு முயற்சி செய்தது.

இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
இதனை அறிந்து நமது திராவிட மாடல் முந்தி கொண்டது. இதனால் முன்கூட்டியே மகளிர் வங்கி கணக்கில் ரூ. 5000 வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தல் திமுக வாக்குறுதியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்குமென திமுகவினர் உறுதியாக நம்புகின்றனர்.
இபிஎஸ் பேச்சுக்கு முதல்வர் பதிலடி
இதனிடையில் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இறுதி காலத்தில், அவரை மு.க. ஸ்டாலின் வீட்டு சிறையில் வைத்ததாக குற்றம்சாட்டினார். அவருடைய இந்த பேச்சுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் குறித்து பேசுவதற்கு இபிஎஸ்ஸுக்கு எந்த அருகதையும் இல்லையென கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link