போர் தொடங்கியது முதல்… ஹார்முஸ் நீரிணையை அதிகம் கடந்துள்ள இந்திய கப்பல்கள்

தெஹ்ரான்,

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை 8 இந்திய கப்பல்கள் கடந்துள்ளன. மற்ற எந்த நாடுகளுக்கும் இப்படியான ஒரு அனுமதி கொடுக்கப்படவில்லை.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்துள்ளது. ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்​தப் போர் காரண​மாக ஹார்​முஸ் நீரிணை வழி​யாக உலக நாடு​களுக்கு செல்​லும் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்து முற்​றி​லும் முடங்​கி​யுள்​ளது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் அரசு மூடியிருக்கிறது.

போர் காரணமாக ஈரான் இந்த முக்கியமான கடல் வழித்தடத்தை மூடியுள்ளது. இருந்தாலும், ,இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட “நட்பு நாடுகளுக்கு” ​​அந்த நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஈரான் கூறிவருகிறது. அந்த வகையில் இந்திய கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையை கடந்து வருகின்றன. இன்று ‘கிரீன் சான்வி’ எனப்படும் எல்பிஜி டேங்கர் கப்பல் ஹாமுஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து தற்போது இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

இதன் மூலம், இந்த முக்கியப் பாதையைக் கடந்து செல்லும் எட்டாவது கப்பல் இதுவாகும். கிரீன் ஆஷா மற்றும் ஜக் விக்ரம் ஆகிய மேலும் இரண்டு கப்பல்கள் வரும் நாட்களில் இந்தியாவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link