டி20 உலகக்கோப்பை: சென்னையில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

சென்னை,

நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் ஆட்டம்

20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் 2-வது நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை (டி பிரிவு) எதிர்கொள்கிறது.

மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் டிம் செய்பெர்ட், பின் ஆலென், டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், பந்து வீச் சில் லோக்கி பெர்குசன். ஜேக்கப் டப்பி, கைல் ஜாமிசன், சோதி ஆகி யோர் வலுசேர்க்கின்றனர்.

ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அண்மையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடன் அடியெடுத்து வைக்கிறது.

சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலகாக இருக்கும் என்பதால் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்துக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.

Also Read
டி20 உலகக் கோப்பை: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
டி20 உலகக்கோப்பை: சென்னையில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

இங்கிலாந்து – நேபாளம் ஆட்டம்

மும்பை வான்கடேயில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியான இங்கிலாந்து அணி, நேபாளத்தை (சி பிரிவு) சந்திக்கிறது. ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது.சர்வதேச போட்டியில் இவ்விரு அணி களும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

இலங்கை-அயர்லாந்து ஆட்டம்

கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடை பெறும் இன்னொரு ஆட்டத்தில் இலங்கை-அயர்லாந்து (பி பிரிவு) அணி கள் மோதுகின்றன.

Source link