சென்னை,
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் டி. நடராஜன், காயம் காரணமாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு களமிறங்கியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாட முடியாமல் போனநிலையில், தற்போது அவர் முழு உடல் தகுதியுடன் மீண்டும் பந்துவீச்சில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.
டெல்லி அணி விளையாடிய முதல் ஆட்டத்தில் நடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் 1 விக்கேட் எடுத்தார். இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு களமிறங்கியது குறித்து மகிழ்ச்சி அவர் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில்,
“ஓராண்டுக்கு பிறகு விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நாட்களாக இந்த அணிக்காக சிறந்த விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்து இந்த ஆண்டு ஒரு நல்ல தொடக்கம் எனக்கு கிடைத்துள்ளது” என்றார்.
