சென்னை,
தமிழக மக்களின் நலன் காக்க, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும். அவருக்கான இடத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வழங்கும் என பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளராக இருந்த ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது பா.ஜ.க. வட்டாரத்தில் சலசலத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கட்சி பொறுப்புகளில் இருந்து ஏ.என்.எஸ். பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஏ.என்.எஸ். பிரசாத் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்ததுள்ளார். இதன் காரணமாக அவர் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்தின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தற்பொழுது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், அவருடைய நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. அவர் கட்சி மற்றும் தேர்தல் பணிகளை மிகவும் சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
