விஜயை பின்தொடரும் இளைஞர்கள் விபத்தில் சிக்கும் சம்பவம்..– காளியம்மாள் சொன்ன ஒற்றை வார்த்தை! – admk kaliyammal says youths following vijay are getting involved in accidents

விஜயை பார்க்கும் ஆசையில் பிள்ளைகள் விபத்தில் சிக்குவது வருத்தமளிக்கிறது என அதிமுக கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் விபத்து காளியம்மாள்(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,ஓராண்டுக்கு முன்பே அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தீவிர பிரச்சாரம் மேற்க்கொண்டு உள்ளது.இந் த நிலையில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் பிரச்சாரம் செய்தார்.

இதனைத் தொடந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பின்பற்றும் பிள்ளைகள் அரசியல் படுத்தப்பட வேண்டும். ஒரு பிரபலமான நடிகரை அனைவரும் பார்க்க விரும்புவார்கள் தான். இதனை இல்லை என்று மறுக்கவில்லை. விஜய் அரசியலில் இருந்து பொதுத்தளத்திற்கு வந்துள்ளார் பொதுமக்களை அவர் அடிக்கடி பார்க்க வேண்டிய நிலை உண்டாகும். நிச்சயமாக விஜய் மக்களை சந்திப்பார்.

புது பிளான் என்ன?நாளுக்கு நாள் வலுவாகும் TVK

இதற்காக அவரை பின்தொடரும் இளைஞர் கூட்டம் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அடிக்கடி விபத்துக்குள்ளாவது உண்மையில் வருத்தம் அளிக்கிறது.அவர்களுடைய பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று அந்த பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கிடையில் தஞ்சாவூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு விஜய் செல்லும்போது கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கினார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த சூழலில் அவருடைய தந்தை அளித்த பேட்டி மனதிற்கு மிகவும் வலியை ஏற்படுத்தியது.அதேபோல் கரூர் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அனைத்தும் வலியை ஏற்படுத்துகிறது. பிரபல நடிகர் பொது தளத்திற்கு வரும் பொழுது மக்கள் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளம் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் அதனை உற்று நோக்க வேண்டும். ஒரு நபரின் மீது பற்றும் பாசம் இருக்க வேண்டியது தான் ஆனால் அது உயிர் போகும் அளவிற்கு இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை கட்டுப்படுத்த தவறி விட்டதா என்று செய்தியாளர் கேள்விக்கு காவல் துறையினருக்கும் பொறுப்புடைமை இருக்கிறது அதே போல் விஜய்யை பார்க்க வரும் கூட்டத்திற்கும் பொறுப்புணர்வு இருக்கிறது. கட்சியை வழிநடத்தக்கூடிய அந்த தலைவருக்கும் பொறுப்புடைமை இருக்க வேண்டும் என்று கூறினார்.முன்னதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை தனித்து சந்திக்க உள்ளது.
இதற்காக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர் அறிமுகப்படுத்தப்பட்டு விஜய் வாக்கு சேரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு தேர்தலுக்கு முன்பாகவே புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரக் காலம் கூட இல்லாதா நிலையில் விஜய் ஏப்ரல் 5 ஆம் தேதி பிரச்சாரம் மேற்க்கொண்டார்.அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற தவெக தொண்டர்கள் விபத்தி சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் தமிழ் சினிமாவில் இருந்த போதும் சரி அரசியலுக்கு வந்த பிறகும் சரி அவருக்கான ஆதரவு குறையவில்லை .விஜய்யை ஒரே முறையாவது பார்த்தூ விட வேண்டும் என்ற ஆசையில், அவர் செல்லும் இடமெல்லாம் திரண்டு வருவது வழக்கமாகி உள்ளது.இது சில நேரங்களில் ஆபத்தாகி விடுகிறது. இந்த சூழலில் விஜய் அரசியலில் ஈடுபட்ட பிறகு, பொதுமக்களை நேரடியாக சந்திப்பதில் என்ற விமர்சனங்களும் அவர் மீது வைக்கபட்டது.
இதனைத் தொடர்ந்து மக்கள் சந்திக்க மதுரை மற்றும் விக்கிரவாண்டியில் பொதுக்கூட்டம் கூட்டி தன்னுடைய பலத்தை காட்டினார். இதனைத் தொடர்ந்து கரூரில் பரப்புரை மேற்க்கொண்ட போது என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. தொடர்ந்து சேலம், தஞ்சாவூர்,அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ரசிகர்கள் விஜய்யை அதிக ஆர்வத்தில் பாதுகாப்பை புறக்கணிப்பது ஆபத்தானது என்பதால், இத்தகைய நிகழ்வுகளை தவிர்க்க அனைவரும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.