இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினார். அதில் 30-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். நூற்றுக் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக கைபர் பக்துன்க்வா மாகாணம் பெஷாவரில் ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆண்களும், தற்கொலைப்படை பயங்கரவாதியின் சகோதரர்கள் ஆவர்.
அவர்களிடம் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை மூலம் தற்கொலைப்படை பயங்கரவாதியின் பெயர் யாசிர் என்றும், பெஷாவரை நிரந்தர முகவரியாக கொண்டவர் என்றும் தெரிய வந்தது.
மேலும், தாக்குதலுக்கு முன்பு 5 மாதங்கள் யாசிர் ஆப்கானிஸ்தானில் ஆயுதங்கள் கையாள்வதற்கும். தற்கொலைப்படை தாக்குதலுக்கும் முறையான பயிற்சி பெற்றதும் விசாரணையில் தெரிய வந்தது. தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள கும்பலை பிடிக்க போலீசார் உறுதி பூண்டுள்ளனர்.
