சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விருதுநகர் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றித் திருநகர்!
சொன்னதைச் செய்யும் ஆற்றல் தி.மு.க.வுக்கே உள்ளது. அதனால்தான், 8000 ரூபாய் இல்லத்தரசி கூப்பன், இருமடங்காகும் உரிமைத்தொகை தொடங்கி, நமது சூப்பர்ஸ்டார் திமுக தேர்தல் அறிக்கை 2026-இல் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் அத்தனையும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.
கட்சியின் கொள்கை என்னவென்றே தெரியாமல், கூவத்தூரில் அடித்த காற்றில் கால்களை வாரிவிட்டு மேலே வந்துவிட்ட பழனிசாமி, நாவடக்கமின்றி அவதூறுகளையும் – வாட்ஸ்அப் வதந்திகளையும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான பதிலடி பேரடியாக விழும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
