சமீபத்தில் கூட கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு முதலமைச்சர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பேசவில்லை. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு பாஜகவுடன் சேர்ந்து திமுகவும் தான் காரணம் என குற்றம்சாட்டினார். இதற்கு கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்திருந்தார். ஏற்கனவே பிரதமருக்கு இது தொடர்பாக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார் என்றார் கனிமொழி.
இதனைத்தொடர்ந்து தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தவெக தான் ஆட்சியமைக்கும் என தொடர்ந்து பேசி வரும் விஜய் திமுக அரசை கடுமையாக சாடி வருகின்றார். இதற்கு தற்போது செல்வப்பெருந்தகைதன் கருத்தை கூறியிருக்கின்றார். அவர் கூறியது, கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். தேர்தல் முடிந்து வாக்கு பெட்டிகளை திறந்து வாக்குகளை எண்ணட்டும், அதன் பிறகு பார்க்கலாம் என்றார் செல்வப்பெருந்தகை.
மேலும் மக்களுக்காக எதுவுமே செய்யாமல் மக்களுக்காக பாடுபடும் கட்சியினரை தொடர்ந்து விமர்சிப்பதில் எந்த நியாயமும் இல்லை. பேரிடர், கொரோனா, மழை புயல், வறட்சி போன்ற அனைத்திலும் மக்களுக்காக ஓடிஓடி உழைத்து அவர்களை காத்து வருகின்றோம். முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட காங்கிரஸ் இயக்கம் மற்றும் தோழமை கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுக்காக 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டு இருக்கின்றோம்.
எனவே இவ்வாறு உழைத்துக்கொண்டு இருக்கும் எங்களை பற்றி குறை சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் எங்களது அட்வைஸ் என கூறினார் செல்வப்பெருந்தகை. இந்நிலையில் இவர் மட்டுமல்லாமல் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூட தாங்கள் செய்த சாதனைகள் மற்றும் செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு தான் வாக்கு சேகரித்து பரப்புரை செய்கின்றார்.
அதே போல எடப்பாடி பழனிசாமியால் அவர் செய்த சாதனைகளை சொல்ல முடியுமா ? என கேட்டு சவால் விடுகின்றார் முக ஸ்டாலின். அவரை தொடர்ந்து செல்வப்பெருந்தகையும் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் எங்களை குறை கூறிக்கொண்டே இருப்பது சரியல்ல. மக்களுக்காக பாடுபடும் எங்களை குறை கூறுவதை நிறுத்த வேண்டும் என்கின்றார். இவ்வாறு அவதூறுகளை மட்டும் பரப்பி வாக்கு சேகரிக்காமல் மக்களுக்காக தாங்கள் செய்த திட்டங்களையும் நல்ல விஷயங்களையும் சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என கூறுகின்றனர் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள்.
மறுபக்கம் திமுக ஆட்சியை விமர்சித்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்கின்றார்தவெக தலைவர் விஜய். எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்வோம், நான் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். திரும்ப மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக பல வலிகளை தாங்கிக்கொண்டு அரசியலுக்கு வந்தேன் என்கின்றார் விஜய்.
விஜய் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு! காரணம் இது தான்
எனவே மக்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு விஜய்க்கு இம்முறை வாய்ப்பு வழங்குவார்களா ? அல்லது திமுக செய்த திட்டங்களை பார்த்து மீண்டும் திமுக ஆட்சியே வரவேண்டும் என விருப்பப்படுவார்களா ? என்பது தான் கேள்வியாக இருக்கின்றது. இதற்கிடையில் அதிமுகவும் நம்பிக்கையாக மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கின்றனர். இவ்வாறு இம்முறை தேர்தல் களத்தில் மும்முனை போட்டி நிலவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
