ஈரான் உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல்; சீனா கண்டனம்

பீஜிங்

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், சமீபத்தில் ஈரானின் உள்நாட்டு கட்டமைப்பின் மீது நடந்த தாக்குதல்களுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக, இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் யூ ஜிங் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது, ஈரானை பேச்சுவார்த்தையில் ஈடுபட வைப்பதற்காக ஈரானின் உள்நாட்டு பாலம் ஒன்றை வான்வழி தாக்குதலில் அமெரிக்கா தாக்கி அழித்தது பற்றி அவர் கூறும்போது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையானது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு உட்பட்டது அல்ல.

சர்வதேச சட்ட விதிமீறலும் ஆகும் என்றார். குடிமக்களின் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

Source link