கலைஞர் கருணாநிதி குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது. ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய முப்பெரும் தலைவர்களின் அன்பு , அறிவு, ஆற்றல் ஆகிய குணங்களை பெற்று அனைவரையும் அரவணைக்கும் பக்குவமிக்க ஒரே தலைவர் தளபதி ஸ்டாலின் மட்டுமே என்பதால் தான்.அவரது தலைமையில் செயல்படும் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் இதுவரை யாரும் வெளியேறினார்கள் என்ற நிலை இல்லை.ஆனால் எடப்பாடி பழனிசாமி, தன்னைத் தானே கட்சியின் பொதுச்செயலாளராகவும் கூட்டணியின் தலைவராகவும் அறிவித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
நன்றி மறந்ததும் நம்பிக்கை துரோகம் செய்த அரசியல்வாதி யார் என்றால், அது எடப்பாடி பழனிசாமி தான் என்று பொதுமக்கள் நினைத்து வருகிறார்கள்.அரசியல் நாகரிகம் தெரியாத எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ளார். அதோடு முதலமைச்சராக வர வேண்டும் என்று ஆசையில் உள்ளார்.எந்த நேரத்தில் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக வந்தாரோ, அப்போது முதல் அதிமுக தொடர் தோல்விகளை தான் சந்தித்து வருகிறது.
இன்றைய அரசியலில் அதிமுகவைப் பற்றியோ அல்லது அதன் தலைவர்கள் குறித்தோ யாரும் பேசுவதில்லை. அதே நேரத்தில் திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மட்டுமே அனைவரும் பேசுகின்றனர் அதற்கு காரணம், ஐந்தாண்டுகளில் அவர் செய்த மக்கள் நலத்திட்டங்கள் தான்.குறிப்பாக பெண்கள் நாட்டின் கண்கள் என்பதற்கு ஏற்ப, மகளிர் உரிமைத் தொகை திட்டம். தேர்தலுக்கு பின் இத்திட்டத்தின் மூலம் மகளிருக்கு இரண்டாயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக 8,000 ரூபாய் மதிப்பிலான பரிசுக் கூப்பன் போன்ற திட்டம், இந்தியாவில் வேறு எந்த மாநில முதலமைச்சர்களும் அறிவிக்காத நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான் இத்தகைய அறிவிப்பு கொடுத்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திக்கும் இந்த தேர்தலில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாத சூழல் நிலவுகிறது.அதனால் நிதானமின்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். மூளை அவுட்டாகி விட்டால் வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும்.
இளநீர், குளிர்பானம் உள்ளிட்டவற்றை அருந்திவிட்டு அமைதியாக இருக்க வேண்டும்.அதை விடுத்து மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதி குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது.பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து சமூக நீதியுடன் மக்கள் பணியாற்றியவர் கலைஞர் கருணாநிதி. அத்தகைய தலைவர் குறித்து பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. யாரால் (நீ ) அரசியலுக்கு வந்தாய், யாரால் பதவி பெற்றாய்? சிறை செல்ல இருந்த உன்னை, அமைச்சர்கள் செல்வகணபதி, முத்துச்சாமி ஆகியோர் தான் காப்பாற்றினார் என நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
ஆனால் 50 ஆண்டு கால வரலாறுள்ள கலைஞர் கருணாநிதி குறித்து பேச தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.என்ன பேசுவது என்று தெரியாமல் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கத்தி வருகிறார். ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராக வருவதற்கு இன்றைய சூழல் சாதகமாக உள்ளது. திமுகவில் தொண்டனாக இணைந்த எனக்கு தளபதி எந்த பதவி கொடுத்தாலும் அதனை சிறப்பாக செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.
