சென்னை,
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப்பிற்கு எதிரான தோல்வியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 6வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.
கடந்த ஆண்டு சேப்பாக்கத்தில் நடந்த 6 ஆட்டங்களில் கடைசி 5 ஆட்டங்களில் சென்னை தோல்வியடைந்தது. தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்திலும் சென்னை தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் சேப்பாக்கத்தில் தொடர்ந்து 6வது முறையாக சென்னை தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், சேப்பாக்கம் இனி சென்னை அணியின் கோட்டை இல்லை என முன்னால வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை என்ற உணர்வை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். தொடர்ச்சியாக சேப்பாக்கத்தில் 6 தோல்விகளை சிஎஸ்கே கண்டுள்ளது. என்னால் இதை நம்பமுடியவில்லை. முன்பெல்லாம் சேப்பாக்கத்தில் விளையாட இறங்கும்போதே கெத்தாக இறங்கி, வேற லெவல் கிரிக்கெட்டை ஆடுவோம். ஆனால் தற்போது சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை என்பது எல்லாம் இல்லாமல் போய்விட்டது. என தெரிவித்துள்ளார்.
