பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிவாய்ப்பு குறித்து பேசிய பியூஷ் கோயல் தவெக தலைவர் விஜய்யையும் விமர்சித்து பேசினார்
முக்கிய அம்சங்கள்:
விஜய் மீண்டும் நடிக்க சென்றுவிடுவார்
பியூஷ் கோயல் விமர்சனம்
இதற்கு கண்டிப்பாக தவெக தலைவர் விஜய் பதிலளிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விஜய் தீவிரமாக பரப்புரை செய்துகொண்டு வருகின்றார். அப்போது கடுமையாக திமுகவை தான் விமர்சித்து வருகின்றார். இதுவரை அவர் பாஜகவை அந்தளவிற்கு விமர்சனம் செய்ததில்லை. ஆனால் களத்தில் திமுக மற்றும் தவெக தான்.இரு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என தொடர்ந்து கூறிக்கொண்டு வருகின்றார்.
இதனால் கண்டிப்பாக அதிமுகவும் பாஜகவும் அதிருப்தியடைந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் காரணமாகவே தான் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தவெக தலைவர் விஜய்யையும் விமர்சனம் செய்துகொண்டு வருகின்றார். தற்போது அவரை தொடர்ந்து பாஜகவினரும் விஜய்யை சீண்ட ஆரம்பித்துள்ளனர்.
ஒருபக்கம் பாஜகவின் தமிழிசைபோன்ற சிலர், விஜய் திமுகவை எதிர்த்து பேசுவதை வரவேற்பதாக கூறினார். ஆனால் அதற்காக தவெக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பது போல பேசினார் தமிழிசை. எனவே விஜய் திமுகவை எதிர்த்து பேசுவதை ஆதரிக்கும் பாஜக அவரால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அதிமுக கூட்டணியின் வாக்குகளை பிரிக்க முடியாது என்கின்றனர்.
அதே சமயம் தவெக கட்சியால் திமுகவிற்கு தான் ஆபத்து. திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகளை தான் விஜய் பிரிப்பார் என்கின்றனர் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள். பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா கூட, திருமாவளவனின் வாக்குகளை தான் விஜய் பிரிப்பார் என குறிப்பிட்டு பேசினார்.
அவரால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என திட்டவட்டமாக கூறினார். தற்போது பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் வெற்றி என உறுதியாக கூறியிருக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் விஜய் மீண்டும் நடிக்க சென்றுவிடுவார் என தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சி மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அந்த கோபத்தை கண்டிப்பாக அவர்கள் காட்டுவார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு செலுத்துவார்கள் என கூறினார் பியூஷ் கோயல். இவர் திமுக குறித்து கூறியிருந்தாலும் விஜய்யை சீண்டியிருப்பது தவெகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. விஜய்யின் அடுத்த பரப்புரையில் பியூஷ் கோயலுக்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என தவெகவினர் கூறி வருகின்றனர்.
விஜய் தான் அடுத்த எம்ஜிஆர்..! 2026 ல் வெற்றி நிச்சயம்!
எனவே தவெக தலைவர் விஜய்யின் அடுத்த பரப்புரையில் அவர் திமுகவை விமர்சிப்பதை போல தேசிய ஜனநாயக கூட்டணியையும் விமர்சிக்கலாம் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக பியூஷ் கோயலின் கருத்திற்கும் பதிலடி தருவார் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
