Udhayanidhi Stalin About Edappadi Palanisamy,எடப்பாடி பழனிச்சாமி பரப்புரையில் இரண்டு விரல்களை காட்டுவது இதனால் தான் : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் – udhayanidhi stalin spoke about edappadi palanisamy in pudukottai campaign

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்து வருகின்றார். அந்த பரப்புரையில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றார். தற்போது புதுக்கோட்டை பிரச்சாரத்திலும் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசினார் உதயநிதி ஸ்டாலின்

முக்கிய அம்சங்கள்:

உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை பரப்புரை

எடப்பாடி பழனிச்சாமி குறித்தான விமர்சனம்

udhayanidhi stalin in pudukottai
கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஒட்டுமொத்த அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசினார். அவரின் பரப்புரை பேச்சு பெரும் அளவில் கவனத்தை ஈர்த்தது. எதிர்கட்சிகளை கிண்டல் செய்து விமர்சித்து உதயநிதி பேசியது மிகப்பெரிய அளவில் வைரலானது. அதுதான் அவரின் முதல் தேர்தல் பரப்புரை என்றாலும் கூட உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.இதைத்தொடர்ந்து அவர் அந்த தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உருவெடுத்து அதன் பின் அமைச்சராக பொறுப்பேற்று தற்போது துணைமுதல்வராக வளர்ந்து இருக்கின்றார் உதயநிதி ஸ்டாலின். ஆனாலும் தற்போதும் அவரின் பரப்புரை பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தான் வருகின்றது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே நடக்கும் வார்த்தை போர் சமூகத்தளங்களில் வைரலாகிக்கொண்டு வருகின்றது.
ஒருவரை ஒருவர் விமர்சித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது எடப்பாடி பழனிசாமி குறித்து மீண்டும் ஒருமுறை விமர்சித்திருக்கின்றார் உதயநிதி ஸ்டாலின். தற்போது புதுக்கோட்டையில் பரப்புரை செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அங்கு திமுக செய்த திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி எதற்காக இரண்டு விரல்களை காட்டுகின்றார் என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கின்றார். அவர் கூறியது, எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை செல்லும்போது எதற்காக இரண்டு விரல்களை காட்டுகின்றார் என தெரியுமா ? அவர் இரட்டைஇலை சின்னத்தை காட்டவில்லை. நான் ஏற்கனவே பத்து முறை தோற்றுவிட்டேன், இப்போ 11 ஆவது முறையும் தோற்கப்போறேன் என்பதை தான் சிம்பாலிக்கா காட்டுகின்றார் எடப்பாடி பழனிச்சாமி.
மேலும் அவர் பரப்புரையில் என்னைப்பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டு வருகின்றார். அதாவது எனக்கு அரசியல் அனுபவம் இல்லை என சொல்லி தொடர்ந்து பேசிக்கொண்டு வருகின்றார் என கூறினார் உதயநிதி ஸ்டாலின். அதற்கு பதிலளித்த அவர், யாருக்காகவும் பயப்படும் அனுபவம் எனக்கு கிடையாது, மக்களோடு மக்களாக நிற்கும் அனுபவம் எனக்கு உள்ளது.
பிரதமர் மோடிக்கு ஏற்ற அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கின்றார். பாஜகவை நாம் தமிழகத்தில் விடமாட்டோம் என தெரிந்துகொண்ட அவர்கள் அதிமுக மூலமாக தமிழகத்திற்குள் வந்துவிடலாம் என நினைக்கின்றார்கள். அதிமுக மூலமாக தமிழகத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம் என பாஜக நினைக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு நாம் மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு என்றைக்குமே டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் வராது என்பதை நிரூபிக்க வேண்டும் என கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
இவ்வாறு புதுக்கோட்டை பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் எப்படி கடந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசாரமாக பரப்புரை இருந்ததோ அதைப்போல தற்போது மீண்டும் இருவரின் இடையிலும் வார்தைப்போர் துவங்கியுள்ளது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

எக்சிபிஷன் போட்டா கூட்டம் கூடும்- விஜய்யை தாக்கி பேசிய உதயநிதி ஸ்டாலின்

மறுபக்கம் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் அனுபவமே இல்லை , திமுக வாரிசு அரசியல் செய்கின்றனர் என அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துகொண்டு வருகின்றார். இவ்வாறு இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக இவர்களின் பேச்சுக்கள் சோஷியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.