மாமன்னன் மகன் நான்..பார்த்து பேசுங்க..- ராசிபுரத்தில் தவெக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் சர்ச்சை பேச்சு! – tvk candidate lokesh tamilselvan sparks controversy with speech in rasipuram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் வேட்பாளராக லோகேஷ் தமிழ்செல்வன் அறிமுகம் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் அதிகமான கட்சியினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய லோகேஷ் தமிழ்செல்வன், “என்னை வேட்பாளராக அறிவித்த விஜய் அண்ணனுக்கு நன்றி. அவர் முதல்வராக வேண்டும் என்பதே என் இலக்கு” என்றார்.அவர் தொடர்ந்து, “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கஞ்சா பிரச்சனை அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ராசிபுரத்தில் 24 மணி நேரமும் பார் செயல்படுகிறது. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என குற்றம்சாட்டினார்.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

மேலும், “இந்த தொகுதியில் எம்எல்ஏ யார் என கேட்டால் வேறு பெயர்களை மக்கள் கூறுகிறார்கள். அதுவே தற்போதைய நிலையை காட்டுகிறது. நமக்கும் மதிவேந்தனுக்கும் தான் நேரடி போட்டி” என்றார்.தனது குடும்ப சாதனைகளை எடுத்துரைத்த அவர், “போதமலைக்கு சாலை வசதி, பாதாள சாக்கடை, சாலை, பைபாஸ், ரேஷன் கடைகள் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது என் தந்தை தான்” என தெரிவித்தார்.
பின்னர் பேச்சின் உச்சத்தில்,“மாமன்னன் மகன் நான் நிற்கிறேன்; உங்க துனை முதல்வர் நடித்த கேரக்டர் தான் நான்… கொஞ்சம் பார்த்து பேசுங்க”என்று அரசியல் களம் சூடேற்றும் வகையில் பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இறுதியாக, “அடுத்த 15 நாட்களில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவோம். இந்த முறை தமிழ்நாட்டின் வண்ணமே மாறும்” என உறுதியளித்தார்.கூட்டத்தில் பெண்கள் நடனம் ஆடி வேட்பாளருக்கு உற்சாகம் அளித்தனர்.

ராசிபுரம் தனித்தொகுதி:

ராசிபுரம் தனித் தொகுதியை பொறுத்தவரை அதிமுகவின் பலம் வாய்ந் த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந் த தொகுதியில் அதிமுக 8 முறை வெற்றி பெற்று உள்ளது. அதே போல் திமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. ராசிபுரம் தனித் தொகுதியை பொறுத்தவரை பட்டியலின சமூகத்தை சேர்ந் தவர்கள் பரவலாக காணப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து, கொங்குவேளாளர் கவுண்டர், நாயக்கர், முதலியார் போன்ற பிற சமூகங்கள் பரவலாக காணப்படுகிறது. இந்த முறை திமுக சார்பில் மா.மதிவேந்தன், பாஜக பிரேம்குமார், தவெக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராசிபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 2011 ஆம் ஆண்டில் அதிமுகவிலிருந்து பி தனபால் 90186 வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றார். திமுகவிலிருந்து விபி துரைசாமி 47000 429 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். பாஜகவிலிருந்து இயல் முருகன் 1730 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்.
2016 ஆம் ஆண்டில் அதிமுகவிலிருந்து டாக்டர் வி சரோஜா 86 ஆயிரத்து 900 வாக்கை எடுத்து வெற்றி பெற்றார். திமுகவிலிருந்து விபி துரைசாமி 77 ஆயிரத்து 270 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். பாஜகவில் இருந்து ஜெ புஷ்பா காந்தி 6,952 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்.

2021 ஆம் ஆண்டில் திமுகவிலிருந்து டாக்டர் எம். மதிவேந்தன் 90,000 727 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவிலிருந்து டாக்டர் வி சரோஜா 88 ஆயிரத்து 775 வாக்குகள் பெற்ற இரண்டாம் இடம் பெற்றார். நாதகவிலிருந்து கே சிலம்பரசி 11,295 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்.

Source link