டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில், தொடரில் இன்று நடைபெற்று வரும் 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளை விளையாடி வருகிறன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. அணியில் அதிகபட்சமாக குல்பதில் நயின் 63 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்து தரப்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Source link