திருத்தணி த.வெ.க வேட்பாளர் சத்யகுமார் தமிழகத்தில் 2034 தொகுதிகளிலும் தங்களது கட்சியே வெல்லும் எனப் பேசிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நிர்வாகிகளின் புறக்கணிப்பும்.. திடீர் ஆர்ப்பாட்டமும்
திருத்தணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்ற சத்யகுமார், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், தனிச்சையாகச் சென்று 1பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சத்யகுமார் பிரச்சாரத்திற்கு வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் வேட்பாளர் எங்களுக்குத் தேவையில்லை என அவர்கள் கோஷமிட்டனர்.
விஜய் சொத்து மதிப்பு இது தானா? வெளியாக ஆவணம்!
சமாதானப் பேச்சில் கைகூடிய எண்ணிக்கை குளறுபடி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்துச் சமாதானப்படுத்த முயன்ற சத்யகுமார், உணர்ச்சிப்பூர்வமாகப் பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள 2,034 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகமே வெற்றி பெறும் என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் கேலி கிண்டல்
தமிழகச் சட்டமன்றத்தின் மொத்தத் தொகுதிகளே 234 தான் என்ற நிலையில், அவர் 2,000-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று குறிப்பிட்டது இணையதளங்களில் பெரும் கிண்டலுக்கு உள்ளானது. வேட்பாளருக்கு அடிப்படைப் புள்ளிவிவரமே தெரியவில்லையா? அல்லது விஜய் மீதான அதீத பாசத்தினால் வாய்தவறிப் பேசினாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய பின்னணி
திருத்தணி தொகுதியில் த.வெ.க தொண்டர்களிடையே நிலவும் உட்கட்சிப் பூசலைச் சமாளிக்க முடியாமல் சத்யகுமார் திணறி வருவதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. ஒருபுறம் நிர்வாகிகள் எதிர்ப்பு, மறுபுறம் பொதுவெளியில் ஏற்பட்ட பேச்சுத் தப்பு என சத்யகுமாரின் தேர்தல் களம் தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது.
வேட்பாளர் தேர்வால் தவெக-வில் சலசலப்பு!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல், அக்கட்சிக்குள் ஒரு சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளில் இருந்து விலகி வந்த மூத்தத் தலைவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது, மாற்றத்தை எதிர்பார்த்து வந்த இளைஞர்களைச் சற்று யோசிக்க வைத்துள்ளது.
இருப்பினும், அனுபவம் மற்றும் இளமை கலந்த கலவையே வெற்றிக்கு உதவும் என்று விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
பெரம்பூர் தொகுதியில் தனது வேட்பு மனுவில் இருந்த சட்ட ரீதியான சிக்கல்களைக் கூடுதல் மனு மூலம் விஜய் சரிசெய்திருப்பது, அவர் மீதான சட்டப் போராட்டங்களை முறியடிக்க உதவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் பி-டீம் விமர்சனங்களுக்கு மத்தியில், விஜய் தனது தனிப்பாதையில் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறார்.
தவெக முக்கிய வேட்பாளர்கள்
- விஜய் (கட்சித் தலைவர்): சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்
- புஸ்ஸி என். ஆனந்த் (பொதுச் செயலாளர்): சென்னை தி. நகர் தொகுதியில் களம் இறங்குகிறார்
- ஆதவ் அர்ஜுனா: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- கே.ஏ. செங்கோட்டையன் (முன்னாள் அமைச்சர்): கோபி செட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் களம் காண்கிறார்.
